Former Cricketer's Mother Dies: முன்னாள் கிரிக்கெட் வீரர் சலில் அன்கோலாவின் தாயார் சடலமாக மீட்பு.. காரணம் என்ன..?
புனே குடியிருப்பில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சலில் அன்கோலாவின் தாயார் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அக்டோபர் 05, புனே (Maharashtra News): மகாராஷ்டிர மாநிலம், புனேவில் (Pune) முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சலில் அன்கோலாவின் (Former Cricketer Salil Ankola) தாயார், அவரது குடியிருப்பில் கடந்த அக்டோபர் 02-ஆம் தேதி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் முதற்கட்ட தகவல்களின்படி, குடியிருப்பில் இருந்து துர்நாற்றம் வீசுவதை அக்கம்பக்கத்தினர் கவனித்தனர். இதனையடுத்து, புனே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். New Scam Alert: 65 வயது பாட்டியை 25 வயது பியூட்டியாக மாற்றும் மெஷின்.. மோசடி தம்பதியின் பலே ஐடியா..!
தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது கொலையா (Murder) அல்லது வேறு ஏதேனும் காரணமா என காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து அவரது குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இருப்பினும் பிரேத பரிசோதனை அறிக்கை வெளிவந்த பிறகே உண்மை வெளிவரும். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
(The above story first appeared on LatestLY on Oct 05, 2024 10:54 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

