Unnatural Sex, Husband-Wife and HC: மனைவி ஒப்புதல் இல்லாமல் உறவு கொள்வது குற்றமில்லை.. உயர்நீதி மன்றத்தின் அதிரடி அறிவிப்பு..!
மனைவியின் ஒப்புதல் இல்லாமல் அவருடன் உறவு கொள்வது பாலியல் துன்புறுத்தல் ஆகாது என மத்திய பிரதேசத்தின் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மே 03, மத்திய பிரதேசம் (Madhya Pradesh News): மத்திய பிரதேசத்தில் ஒரு பெண் தனது கணவர் மீது, பாலியல் துன்புறுத்தல் வழக்கு தொடர்ந்து இருந்தார். அதாவது பெண்ணின் கணவர் அப்பெண்ணிற்கும் விருப்பம் இல்லாமல் அவருடன் பாலியலில் ஈடுபட்டுள்ளார். இதனை எதிர்த்து தன் கணவன் மீது அப்பெண் பாலியல் துன்புறுத்தல் வழக்கினை பதிவு செய்திருந்தார். அந்த வழக்கிற்கான தீர்ப்பானது இன்று அறிவிக்கப்பட்டிருந்தது. TN Weather Report: இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!
அதன்படி, மனைவியின் ஒப்புதல் இல்லாமல் அவருடன் உறவு கொள்வது பாலியல் துன்புறுத்தல் ஆகாது என மத்திய பிரதேசத்தின் உயர்நீதிமன்றம் (Madhya Pradesh High Court) தீர்ப்பளித்துள்ளது. மேலும் இயற்கைக்கும் மாறாக ஆசனவாயில் ஆணின் அந்தரங்க உறுப்பைத் திணித்தல் பாலியல் துன்புறுத்தலாக கருதப்பட்டாலும், 15 வயதிற்குக்கீழ் பட்ட பெண்ணிற்கு மட்டுமே அது பொருந்தும். 15 வயதிற்கு மேற்பட்ட பெண்ணாக இருப்பின், கணவர் ஒப்புதல் இல்லாமல் உறவு வைத்தாலும் அது தவறில்லை என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
(The above story first appeared on LatestLY on May 03, 2024 04:08 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

