Bomb Threat: விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்... பலத்த பாதுகாப்பு..!

கர்நாடக மாநிலம் மங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

Bomb Threat: விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்... பலத்த பாதுகாப்பு..!
Mangalore International Airport (Photo Credit: Wikipedia)

டிசம்பர் 29, மங்களூரு (Mangaluru): கர்நாடக மாநிலம் மங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டதைத் தொடர்ந்து, பாதுகாப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் வந்த மின்னஞ்சலில் இங்குள்ள ஒரு விமானத்தில் மற்றும் விமான நிலையத்தின் உள்ளே வெடிபொருட்கள் உள்ளது. அவை சில மணி நேரங்களில் வெடித்துவிடும். நான் உங்கள் அனைவரையும் கொன்றுவிடுவேன் என்றும், நாங்கள் பன்னிங் என்ற பயங்கரவாத குழுவை சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. TN Weather Report: தமிழத்திற்கு மழை வாய்ப்பு... மீனவர்களுக்கு எச்சரிக்கை..!

இந்த இணைய மிரட்டலைக் கண்ட விமான நிலைய அதிகாரிகள் உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து முழு பாதுகாப்பு சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். அதுமட்டுமின்றி விமான நிலையத்திற்கு வெளியே கூடுதல் செக்போஸ்ட்கள் வைத்து பாதுகாப்பை பலப்படுத்தினர்.

(The above story first appeared on LatestLY on Dec 29, 2023 04:01 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).