Gun Fire (Photo Credit: Pixabay)

மே 02, பாக்பாத் (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பாக்பாத் மாவட்டம், பருவூட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சார்ந்தவர் தீரஜ் (வயது 24). தற்போது அங்குள்ள வாஜ்பூர் கிராமத்தில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று மாலை 3 மணி அளவில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

குற்றவழக்கில் தொடர்புடையவருக்கு நேர்ந்த சம்பவம்: தகவல் அறிந்த காவல்துறையினர் நிகழ்விடத்திற்கு விரைந்து அவரின் உடலை மீட்பு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட நபர் கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அதே கிராமத்தைச் சார்ந்த சன்னி தோமர் என்பவரின் கொலை வழக்கில் தொடர்புடையவர் என்பது உறுதியானது. Wearable Air Conditioner: "இனி ஹெட்போன் தேவையில்லை.. கழுத்துல ஏசி போட்டுக்கோங்க.." சோனியின் வியரபில் ஏர் கண்டிஷனர் வந்தாச்சு..! 

அதிகாரிகள் தீவிர விசாரணை: இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர், தற்போது நீதிமன்றத்தின் உதவியுடன் பிணையில் வெளியே வந்தார். கடந்த ஒரு மாதமாக அவர் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில், இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது. இதனால் முன் விரோதத்தில் கொலை நடந்ததா? என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.