Dog Attack: நடைபாதையில் உறங்கிய 5 வயதுடைய சிறுமி நாய் கடித்து பலி., ஒன்றரை வயது குழந்தை உயிர் ஊசல்.. நெஞ்சை பதறவைக்கும் சோகம்.!

இந்தியாவெங்கும் நாய்கள் மனிதர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்துவது தொடர்கதையாகியுள்ளது. வெளிநாட்டு நாய்கள் முதல் உள்ளூர் நாய்கள் வரை மூர்க்கமாக இருக்கும் நிலையில், பெரியவர்களான நாம் சுதாரிப்புடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது இந்த செய்தித்தொகுப்பு.

Dog Attack: நடைபாதையில் உறங்கிய 5 வயதுடைய சிறுமி நாய் கடித்து பலி., ஒன்றரை வயது குழந்தை உயிர் ஊசல்.. நெஞ்சை பதறவைக்கும் சோகம்.!
Kanpur Minor Girl Attacked & Killed by Street Dogs (Photo Credit: @rohitt_tripathi X)

மே 27, கான்பூர் (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூர் மாவட்டம், சிடிஐ கோவிந்த் நகர் பகுதியில் வசித்து வரும் 5 வயது சிறுமி, நேற்று இரவில் வீட்டின் வெளியே உறங்கிக்கொண்டு இருந்தார். அச்சமயம், அங்கு வந்த தெருநாய்கள் ஒன்று (Kanpur Street Dogs Attacked Child Girl) சிறுமியை இழுத்துச்சென்று கடித்து குதறி இருக்கின்றன. மேலும், அவரது தங்கையான 1.5 வயது குழந்தையையும் நாய்கள் இழுத்துச்சென்றுள்ளன. Gujarat Horror: குஜராத்தை கடந்த 5 ஆண்டுகளில் நடுநடுங்க வைத்த கோர விபத்துகள்; விபரம் இதோ.!

சிறுமி பலி., மற்றொருவர் படுகாயம்: இந்த சம்பவத்தில் 5 வயதுடைய சிறுமி நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில், 1.5 வயதுடைய குழந்தை மீட்கப்பட்டு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதி செய்யப்பட்டுள்ளது. சிறுமியின் குடும்பத்தினர் அனைவரும் குழந்தைகளுடன் பாதையில் படுத்து உறங்கியபோது இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர். மேற்படி விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன.

(The above story first appeared on LatestLY on May 27, 2024 01:21 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).