Cops Arrest Accuse Entering Hospital Ward (Photo Credit: @TusharSrilive X).jpeg

மே 23, உத்தரகாண்ட் (Uttarakhand News): உத்திரகாண்ட் மாநிலத்தில் உள்ள ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றி வரும் பெண் மருத்துவர் ஒருவருக்கு, நோயாளியாக அனுமதியான இளைஞர் ஒருவர் செல்போனில் ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பி இருக்கிறார். கடந்த மே மாதம் 19ம் தேதி முதல் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக பெண் மருத்துவர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். Harmful Microplastics In Human Testicle: தீங்கு விளைவிக்கும் மைக்ரோபிளாஸ்டிக்ஸ்; மனித விந்தணுக்களில் இருப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

திரைப்பட பாணியில் குற்றவாளி கைது: அதனைத்தொடர்ந்து, எய்ம்ஸ் மருத்துவமனையின் பொது மருத்துவ சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்கு அனுமதியாகி இருந்த குற்றவாளி சதிஷ் குமார் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். திரைப்பட பாணியில் பொது மருத்துவ சிகிச்சை பிரிவிக்குள் காருடன் வந்த காவல் துறையினர், குற்றவாளியை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதனைத்தொடர்ந்து, சதிஷ் குமார் சிறையில் அடைக்கப்பட்டார். திரைப்பட பாணியில் நடந்த கைது நடவடிக்கை குறித்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.