WhatsApp Group For Hindu IAS Officers: இந்து ஐஏஎஸ் அதிகாரிகளுக்கான வாட்ஸ்அப் குழு.. வெடித்த சர்ச்சை.!

கேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன் ‘இந்து ஆபீசர்ஸ்’ என்ற பெயரில் ஒரு வாட்ஸ்அப் குரூப் தொடங்கப்பட்டது.

WhatsApp Group For Hindu IAS Officers: இந்து ஐஏஎஸ் அதிகாரிகளுக்கான வாட்ஸ்அப் குழு.. வெடித்த சர்ச்சை.!
WhatsApp (Photo Credit: Pixabay)

நவம்பர் 04, திருவனந்தபுரம் (Kerala News): கேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன் தமிழகத்தை சேர்ந்த ஒரு ஐஏஎஸ் அதிகாரியின் தலைமையில் ‘இந்து ஐஏஎஸ் ஆபீசர்ஸ்’ (Hindu IAS officers) என்ற பெயரில் ஒரு வாட்ஸ்அப் குரூப் (WhatsApp Group) தொடங்கப்பட்டது. இதில் ஜூனியர் முதல் மூத்த அதிகாரிகள் வரை உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர். இந்தத் தகவல் வெளியே கசியத் தொடங்கியதும் அந்த குரூப் உடனடியாக கலைக்கப்பட்டது. Woman Falls Onto Tracks: ஓடும் ரயிலில் ஏற முயன்ற மாணவி.. அடுத்து நடந்த அதிர்ச்சி - வைரல் வீடியோ.!

இது குறித்து அந்த தமிழக ஐஏஎஸ் அதிகாரியிடம் கேட்டபோது, தன்னுடைய செல்போனை யாரோ மர்ம நபர்கள் ஹேக் செய்து விட்டதாகவும், அதில் இருந்து சில ஐஏஎஸ் அதிகாரிகளின் எண்களை தேர்ந்தெடுத்து வாட்ஸ் ஆப் குரூப்பை உருவாக்கியதாகவும் இது தொடர்பாக திருவனந்தபுரம் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

(The above story first appeared on LatestLY on Nov 04, 2024 02:37 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).