PM Modi: கஜுராஹோவில் கென்-பெட்வா நதிகளை இணைக்கும் திட்டம்.. அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி..!
கஜுராஹோவில் கென்-பெட்வா நதிகளை இணைக்கும் திட்டம் மற்றும் பிற வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
டிசம்பர் 25, டெல்லி (Delhi News): முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் 100-வது பிறந்த நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி இன்று மத்தியப் பிரதேசத்திற்குப் பயணம் மேற்கொண்டார். அப்போது கஜுராஹோவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதோடு நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்தார். அந்த வகையில் கஜுராஹோவில் கென்-பெட்வா நதிகளை இணைக்கும் திட்டம் மற்றும் பிற வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
கஜுராஹோவில் கென்-பெட்வா நதிகளை இணைக்கும் திட்டம்:
இந்தத் திட்டம் மத்தியப் பிரதேசத்திலும் உத்தரப்பிரதேசத்திலும் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு நீர்ப்பாசன வசதியை வழங்குவதுடன், லட்சக்கணக்கான விவசாயக் குடும்பங்களுக்கும் பயனளிக்கும். இந்தத் திட்டம் பிராந்திய மக்களுக்கு குடிநீர் வசதியையும் வழங்கும். இதனுடன், 100 மெகாவாட்டுக்கும் அதிகமான பசுமை ஆற்றலை வழங்கும் நீர்மின் திட்டங்களும் தொடங்கி வைக்கப்படும். இந்தத் திட்டங்கள் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதோடு கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்தும். Train Accident: சௌராஷ்டிரா விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து..!
மேலும் எரிசக்தி தன்னிறைவு மற்றும் பசுமை எரிசக்தியை ஊக்குவிப்பதற்கான அவரது உறுதிப்பாட்டிற்கு ஏற்ப, மத்தியப் பிரதேச மாநிலம் கந்த்வா மாவட்டத்தில் உள்ள ஓம்காரேஸ்வரில் நிறுவப்பட்டுள்ள ஓம்காரேஸ்வர் மிதக்கும் சூரிய மின்சக்தி திட்டத்தை பிரதமர் தொடங்கி வைப்பார். இந்தத் திட்டம் கார்பன் உமிழ்வைக் குறைக்கும்; 2070-க்குள் நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு என்ற அரசின் இலக்கை அடைய இது உதவும். இது நீர் ஆவியாதலைக் குறைப்பதன் மூலம் நீர் பாதுகாப்பிற்கும் உதவும்.
(The above story first appeared on LatestLY on Dec 25, 2024 05:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

