Cooking Gas Cylinder Price Hiked: சிலிண்டர் விலை கடும் உயர்வு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!
நாடு முழுவதும் 19 கிலோ எடை கொண்ட வணிக எரிவாயு சிலிண்டரின் விலையானது உயர்த்தப்பட்டுள்ளது.
மார்ச் 1, புதுடெல்லி (New Delhi): ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் (Gas Cylinder) மற்றும் பணிகள் பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர்களின் விலை மாற்றத்தினை அறிவிப்பதனை எண்ணெய் நிறுவனங்கள் வழக்கமாகக் கொண்டுள்ளன. அதன்படி இன்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. Pro Kabaddi League 2024 Final: புரோ கபடி லீக் இறுதிப்போட்டி.. புனே, ஹரியானா அணிகள் இடையே இன்று பலப்பரீட்சை..!
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கேஸ் சிலிண்டர் விலையை ரூ.23.50 உயர்த்தியுள்ளனர். இந்த விலை உயர்வு மூலம், 19 கிலோ எடை கொண்ட வணிக ரீதியான எல்பிஜி எரிவாயு சிலிண்டர் டெல்லியில் ரூ.1.795.00க்கு விற்பனை செய்யப்படும். மேலும் கொல்கத்தாவில் வர்த்தக எரிவாயு சிலிண்டர்களின் திருத்தப்பட்ட விலை ரூ.1911.00 ஆகவும் மும்பையில் ரூ.1.749.00 ஆகவும், சென்னையில் ரூ.1960.50 ஆகவும் விற்பனை செய்யப்படும். வணிக கேஸ் சிலிண்டர் விலை உயர்வு காரணமாக, பொதுமக்கள் முதல் வர்த்தக நிறுவனங்கள் வரை அனைவரும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
(The above story first appeared on LatestLY on Mar 01, 2024 12:07 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

