Road Accident: அப்பளம் போல நொறுங்கி உருக்குலைந்த கார்.. 2 பேரின் உயிரை பறித்த அதிவேகம்..!
பஞ்சாபில் அதிவேகமாக வந்த கார் டிராக்டர் டிராலி மீது மோதியதில் சம்பவம் இடத்திலேயே 2 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நவம்பர் 25, ஃபரித்கோட் (Punjab News): பஞ்சாப் மாநிலம், ஃபரித்கோட் (Faridkot) அருகே உள்ள சாதிக் ராஜ் நெடுஞ்சாலையில் கார் சென்றுக் கொண்டிருந்தது. அதிவேகமாக சென்ற கார், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, டிராக்டர் டிராலி மீது அதிபயங்கரமாக மோதியது. இதில், 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. Parliament Winter Session: இந்தியாவே எதிர்பார்க்கும் மக்களவை குளிர்கால கூட்டத்தொடர்.. இன்று முதல் தொடக்கம்.!
இதனையறிந்த உள்ளூர்வாசிகள் காரின், கண்ணாடிகளை உடைத்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும், இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அப்பளம் போல நொறுங்கி உருக்குலைந்த கார்:
Faridkot, Punjab: A major accident occurred late at night on the Faridkot-Sadik Raj road when a speeding car crashed into a tractor-trolley. Two people died, and one is in critical condition pic.twitter.com/wdMvTPxUM0
— IANS (@ians_india) November 25, 2024
(The above story first appeared on LatestLY on Nov 25, 2024 11:52 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

