Sabarimala Bus Services: ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு.. சபரிமலை செல்ல ஸ்பெஷல் சொகுசு பேருந்துகள்..!

ஐயப்ப பக்தர்களுக்கு ஏதுவாக சபரிமலைக்கு வரும் 15ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

Sabarimala Bus Services: ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு.. சபரிமலை செல்ல ஸ்பெஷல் சொகுசு பேருந்துகள்..!
TN Govt SETC Bus | Sabarimala Ayyappa (Photo Credit: Instagram / Wikipedia)

நவம்பர் 08, திருவனந்தபுரம் (Kerala News): கார்த்திகை, மார்கழி, தை மாதங்கள் முருகன், ஐயப்பன் சுவாமிகளுக்கான காலமாக தொன்றுதொட்டு இருந்து வருகிறது. பழனி, திருச்செந்தூர், சபரிமலை ஆகிய கோவில்களுக்கு பக்தர்கள் மாலையிட்டு, விரதம் இருந்து ஸ்வாமிகளை தரிசனம் செய்ய தயாராகி வருகிறார்கள். அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான சபரிமலை சீசன் நவம்பர் நடுப்பகுதியில் தொடங்க உள்ளது.

ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்: சபரிமலையில் மண்டல மகர விளக்கு பூஜை காலத்தில் தரிசனத்திற்காக ஆன்லைன் முன்பதிவு தொடங்கியுள்ளது. நாள் தோறும் 70 ஆயிரம் பேர் முன்பதிவு செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர். மேலும் சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்ய விரும்புவோர் ஆன்லைனில் முன்பதிவு செய்யாவிட்டாலும் சபரிமலைக்கு செல்லலாம். Ban On Single-Use Plastic: கல்லூரிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் - யுஜிசி அறிவிப்பு..!

ஸ்பெஷல் சொகுசு பேருந்துகள்: இந்நிலையில், தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் கேரள மாநிலம் சபரிமலைக்கு, 60 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் இரா. மோகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சபரிமலையில் உள்ள அய்யப்பன் ஆலயத்திற்கு, ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு ஆகிய திருவிழாக்களின் போது, தமிழகத்திலிருந்து அய்யப்ப பக்தர்கள் சென்று வர ஏதுவாக, தமிழகத்தின் முக்கிய நகரங்களிலிருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இந்த ஆண்டும் 15.11.2024 முதல் 16.01.2025 வரையில், (சென்னை கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம்), திருச்சி, மதுரை மற்றும் புதுச்சேரி / கடலூர் ஆகிய இடங்களிலிருந்து பம்பைக்கு, அதிநவீன சொகுசு மிதவைப் பேருந்துகள் (Ultra Deluxe) மற்றும் குளிர்சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி உள்ள (NSS) சிறப்புப் பேருந்துகளாக இயக்கப்படவுள்ளன. (சபரிமலை தேவஸ்தானம் அறிவிப்பின்படி 27.12.2024 முதல் 30.12.2024 மாலை 5 மணி வரை கோவில் நடை சாத்தப்படுவதால் 26.12.2024 முதல் 29.12.2024 வரை இந்தச் சிறப்புப் பேருந்து இயக்கப்படமாட்டாது) இந்த வருடம் பக்தர்கள் கூடுதலாக பயணம் செய்ய முன்வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவற்றினை கருத்தில் கொண்டு சென்னை மற்றும் இதர இடங்களிலிருந்து கூடுதலாக பேருந்துகள் இயக்குவதற்கு அனுமதி பெறப்பட்டு சிறப்பான முறையில் பேருந்துகளை இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் குழுவாக செல்லும் பக்தர்களுக்கு வாடகை அடிப்படையில் பேருந்து வசதி செய்து தரப்படும். மேலும், 60 நாட்களுக்கு முன்னதாக இச்சிறப்புப் பேருந்துகளுக்கு ஆன்லைன் மூலமாக, www.tnstc.in இணையதளம் மற்றும் TNSTC Official app மூலம் முன்பதிவு செய்துகொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பேருந்துகளின் விவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களுக்கு, 9445014452, 9445014424 மற்றும் 9445014463 ஆகிய கைப்பேசி எண்களைத் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று SETC பேருந்துகள் பம்பையில் இருந்து பக்தர்களை ஏற்ற கேரள அரசு அனுமதி வழங்கியது. கேரள அரசின் அனுமதியால் தமிழக பக்தர்கள் 20 கி.மீ வரை கேரள பேருந்துகளில் அலைய வேண்டிய நிலை இனி இருக்காது.

(The above story first appeared on LatestLY on Nov 08, 2024 02:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).