Temple VIP Darshans: கோவில்களில் விஐபிகள் தரிசனம் எதிர்த்து வழக்கு.. அதிரடி செய்த உச்ச நீதிமன்றம்.!

நாடு முழுவதும் உள்ள கோவில்களில் விஐபிகள் நுழைவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

Temple VIP Darshans: கோவில்களில் விஐபிகள் தரிசனம் எதிர்த்து வழக்கு.. அதிரடி செய்த உச்ச நீதிமன்றம்.!
Supreme Court of India (Photo Credit: Wikipedia Commons)

ஜனவரி 31, புதுடெல்லி (New Delhi): கோவிலில் சுவாமி தரிசனத்தில் விஐபி நடைமுறை பெரிய சிக்கலாக மாறி வருகிறது. விஐபிக்களுக்கு கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளை மட்டும் செய்து கொடுக்க வேண்டும். இதற்கு அதிகம் செலவு செய்யக்கூடாது. முடிந்தவரை செலவை குறைப்பதோடு விஐபி தரிசன நடைமுறையை குறைக்க வேண்டும். கோவில் நிர்வாகத்தினர் அனைத்து பக்தர்களும் ஒன்று என கருத வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. Delhi Winter Death: நடுநடுங்க வைத்த குளிர்.. 56 நாட்களில் 474 பேர் மரணம்.. டெல்லியில் அதிர்ச்சி.. ஷாக் ரிப்போர்ட்.!

உச்ச நீதிமன்றம் தீர்ப்பு:

இந்த வழக்கின் விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. அதில் நாடு முழுவதும் உள்ள கோவில்களில் விஐபிகள் நுழைவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்திய தலைமை நீதிபதி (சிஜேஐ) சஞ்சீவ் கண்ணா தலைமையிலான பெஞ்ச், மனுவில் எழுப்பப்பட்டுள்ள பிரச்சினையை தாங்கள் ஏற்றுக்கொண்டாலும், இது தொடர்பாக தீர்ப்பளிக்கவோ அல்லது எந்த உத்தரவும் பிறப்பிக்கவோ இந்த வழக்கு பொருந்தாது என்று தெளிவுபடுத்தியது. எவ்வாறாயினும், மாநில அதிகாரிகள் பொருத்தமான முடிவுகளை எடுக்கலாம் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.

(The above story first appeared on LatestLY on Jan 31, 2025 01:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).