Surgery Gone Wrong: "ஆட்டோ கண்ணாடிய திருப்புனா வண்டி எப்படி போகும்?" இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்.!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் சிறுவனின் இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Surgery (Photo Credit: Pixabay)

நவம்பர் 14, நொய்டா (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த யுதிஷ்டிர் (வயது 7) சிறுவனின் இடது கண்ணில் அடிக்கடி நீர் வழிந்து வந்துள்ளது. இதனால் சிறுவனின் பெற்றொர் அவரை நொய்டா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுவனை சோதித்து பார்த்த மருத்துவர் ஆனந்த வர்மா, சிறுவனின் கண்ணில் மெல்லிய பிளாஸ்டிக் போன்ற பொருள் இருப்பதாகவும், அதனை அகற்றிவிடலாம் என்றும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, சிறுவனின் கண்ணில் நேற்று முன்தினம் (நவ.12) அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

ஆனால் சிறுவனின் இடது கண்ணுக்கு பதிலாக தவறுதலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து, சிறுவனின் பெற்றோர் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும், காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெற்றோர் புகார் அளித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement