Husband Kills Wife: ஆடம்பர செலவு செய்த மனைவி; கொலை செய்ய ரூ. 2.5 லட்சம் லஞ்சம்.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்..!

மத்திய பிரதேசத்தில் ஆடம்பர செலவு செய்த மனைவியை கணவர் திட்டமிட்டு கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Husband Kills Wife: ஆடம்பர செலவு செய்த மனைவி; கொலை செய்ய ரூ. 2.5 லட்சம் லஞ்சம்.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்..!
Husband Kills Wife (Photo Credit: @SachinGuptaUP X)

ஆகஸ்ட் 26, குவாலியர் (Madhya Pradesh News): மத்திய பிரதேச மாநிலம், குவாலியரில் (Gwalior) கடந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதி அன்று, முஸ்கான் (வயது 25) என்ற பெண்ணும், அவரது சகோதரரும் இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது, எதிரே வந்த கார் அவர்கள் மீது மோதியதில், முஸ்கான் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது சகோதரர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். Truck Ran Over into Footpath: தறிகெட்டு நடைபாதையில் பாய்ந்த ட்ரக்.. 3 பேர் பரிதாப பலி., பலர் படுகாயம்.! சாலையோரம் உறங்கியபோது சோகம்.!

திட்டமிட்டு கொலை:

இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், உயிரிழந்த முஸ்கான் என்பவர் திட்டமிட்டு கொலை (Murder) செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அதில், கடந்த 2017-ஆம் ஆண்டு அஜய் பார்கவா என்பவர், போட்டி தேர்வுக்கு படிக்கும்போது பயிற்சி மையத்தில், துர்காவதி என்ற முஸ்கானை சந்தித்துள்ளார். இவர்கள் இருவரும் நெருக்கமாக பழகி வந்த நிலையில், காதலாக மாறியது. பின்னர், இருவரும் கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். முஸ்கானுக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து (Divorce) ஏற்பட்டுள்ளது. அஜய்க்கும் இது இரண்டாவது திருமணம் ஆகும்.

ஆடம்பர செலவு:

இந்நிலையில், அஜய் தனது இரண்டாவது மனைவியுடன் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், மனைவி முஸ்கான் அதிகளவில் செலவு செய்து வந்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த அவரது கணவர் அஜய், தனது இரண்டாவது மனைவியை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்பேரில், தனது நண்பனிடம் ரூபாய் 2.5 லட்சம் பணத்தை லஞ்சமாக கொடுத்து, கொலை செய்ய ஏற்பாடு செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, அஜய் மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

(The above story first appeared on LatestLY on Aug 26, 2024 04:02 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).