Woman Murder: நகைக்காக பெண் கொடூர கொலை.. மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு..!

தெலுங்கானாவில் பெண்ணை கொலை செய்துவிட்டு, நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Woman Murder: நகைக்காக பெண் கொடூர கொலை.. மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு..!
Murder (Photo Credit: Pixabay)

செப்டம்பர் 24, மேட்சல் (Telangana News): தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மேட்சல் (Medchal) மாவட்டம், துண்டிக்கல் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட மல்லம்பேட்டையில் அடுக்குமாடி குடியிருப்பில் நகைக்காக (Jewellery) பெண் ஒருவர் மர்ம நபரால் (Murder) கொல்லப்பட்டார். சாரதா (வயது 50) என்ற பெண் கொல்லப்பட்டு, அவரது உடலில் இருந்த தங்க நகைகள் மற்றும் அவருடைய செல்போன் திருடப்பட்டுள்ளது. Principal Kills 6-Year-Old Girl: இந்தியாவே அதிர்ச்சி.. 6 வயது சிறுமி பலாத்கார முயற்சி & கொலை.. தலைமை ஆசிரியர் அதிர்ச்சி செயல்..!

இதுகுறித்து, சாரதாவின் மகன் துண்டிக்கல் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருவதாகவும் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நகைக்காக பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை:

(The above story first appeared on LatestLY on Sep 24, 2024 05:29 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).