Woman Dies After Sex: காதலனுடன் தனிமையில் உல்லாசம்: அந்தரங்க பகுதியில் இரத்தம் வழிய துடிதுடித்து சோகம்.. பெண் பலி..!
குஜராத்தில் இளம்பெண் ஒருவர் உடலுறவு வைத்துக் கொண்ட சிறிது நேரத்திற்குப் பின் ஏற்பட்ட ரத்தப்போக்கில் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அக்டோபர் 01, நவ்சாரி (Gujarat News): குஜராத் மாநிலம் நவ்சாரி பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் நர்சிங் படித்து வருகிறார். இவர் ஏழு மாதங்களுக்கு முன்பு சமூக வலைதளத்தின் வழியாக ஒருவரினை சந்தித்து காதல் வயப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் நேற்று ஒரு ஹோட்டலில் சந்தித்துள்ளனர். அங்கு உடல் உறவு கொண்டுள்ளனர். அப்போது திடீரென அப்பெண்ணிற்கு பிறப்புறுப்பில் இருந்து ரத்தம் கசிய ஆரம்பித்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பெண்ணின் காதலன் துணியினை கொண்டு தடுத்துள்ளார். ஆனால் அந்தப் பெண் சிறிது நேரத்தில் மயக்கம் அடைந்துள்ளார். Man Suffers Stroke After Massage: மக்களே உஷார்! ஹெட் மசாஜ் செய்தவர்க்கு பக்கவாதம்.. காரணம் என்ன?!
தொடர்ந்து ஒன்றரை மணி நேரமாக இணையத்தில், இதனை எவ்வாறு சரி செய்ய வேண்டும் என்று அப்பெண்ணின் காதலன் தேடியுள்ளான். எதுவும் சரி வராததால் தன்னுடைய நண்பரை அழைத்துள்ளார். இருவரும் அந்தப் பெண்ணினை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அந்தப் பெண்ணின் பெற்றோர்கள் வருவதற்கு முன்பே, அப்பெண் உயிரிழந்தார். சீக்கிரமாக மருத்துவமனைக்கு அழைத்து வராததே அவரின் இறப்புக்கு காரணம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் பிரேத பரிசோனையில் ரத்த கசிவினால் (Heavy Bleeding) அப்பெண் உயிரிழந்தார் என்பது தெரியவந்துள்ளது.
(The above story first appeared on LatestLY on Oct 01, 2024 04:34 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

