Odisha Shocker: கணவரை கொலை செய்து, 3 நாட்கள் சடலத்துடன் வாழ்ந்த மனைவி: துர்நாற்றத்தில் அம்பலமான அதிர்ச்சி உண்மை.!

மதுபோதையில் இருந்த துரா, மனைவியிடம் தகராறு செய்துள்ளார். ஒருகட்டத்தில் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற சுனிதா, கணவரை இரும்பு ராடால் பலமாக தாக்கி இருக்கிறார்.

Alcohol | Women With Weapon; Both File Pic (Photo Credit: Pixabay)

அக்டோபர் 11, கியான்ஞ்ஹர் (Odisha News): ஒடிஷா மாநிலத்தில் உள்ள கியான்ஞ்ஹர் மாவட்டம் (Odisha's Keonjhar District), கோடிபாஸா கிராமத்தில் வசித்து வருபவர் துரா. இவரின் மனைவி சுனிதா ஜூங்கா.

தம்பதிகளுக்கு 4 குழந்தைகள் இருக்கின்றனர். மதுபோதைக்கு அடிமையான துரா, எப்போதும் வேலைக்கு சென்றுவிட்டு மதுபோதையில் வீட்டிற்கு வருவது வழக்கம். வீட்டு செலவுகளுக்கும் பணம் தருவது இல்லை.

இதனால் குடும்பத்தில் எப்போதும் சண்டை-சச்சரவு என்பது தொடர்ந்துள்ளது. குடும்பத்தின் வறுமையை போக்க, சுனிதா கிடைத்த வேலைகளை செய்து குழந்தைகளை கவனித்து வந்துள்ளார்.

இந்நிலையில், சம்பவத்தன்று மதுபோதையில் இருந்த துரா, மனைவியிடம் தகராறு செய்துள்ளார். ஒருகட்டத்தில் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற சுனிதா, கணவரை இரும்பு ராடால் பலமாக தாக்கி இருக்கிறார். Best Smartphones Under Rs,30,000: அமேசான் ஆஃபரில் ரூ.30 ஆயிரத்திற்கு கீழ் அசத்தல் ஸ்மார்ட்போன்கள்: செல்போன் பிரியர்களே முந்துங்கள்.. விபரம் இதோ.! 

இரத்த வெள்ளத்தில் துடிதுடித்த துரா நிகழ்விடத்திலேயே பலியாகிவிட, கணவர் இறந்து 3 நாட்கள் ஆகியும் மனைவி எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. துர்நாற்றம் எடுத்ததை தொடர்ந்து, அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலை அறிந்ததும் நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், துராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் மேற்கூறிய தகவல் அம்பலமானது.

இதனையடுத்து, சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், சுனிதாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். சுனிதாவின் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குடிப்பழக்கத்தால் தந்தை கொல்லப்பட, தாயும் சிறைக்கு சென்றுவிட்ட நிலையில், குழந்தைகள் ஆதரவின்றி அனாதையாக தவிப்பது காண்போரை சோகத்திற்கு உள்ளாக்கியது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement