Realme Narzo 60 Pro , Motorola Edge 40 Neo , Samsung Galaxy A34 , Vivo T2 Pro 5G (Photo Credit: Twitter)

அக்டோபர் 11, சென்னை (Technology News): பண்டிகை காலம் என்றாலே கடைகளில் தள்ளுபடிக்கு பஞ்சம் இருக்காது. ஆன்லைன் ஷாப்பிங் வருகைக்கு பின்னர், பல பொருட்கள் மலிவு விலையில் கிடைக்கிறது. அதனையே வீட்டில் இருந்தபடி பண்டிகை காலங்களில் தள்ளுபடி விலையிலும் மக்கள் பெற்று மகிழ்கின்றனர்.

தற்போது அமேசான், பிளிப்கார்ட் போன்ற தளங்களில் விழாக்கால சலுகை விற்பனையானது நடந்து வருகிறது. இதற்காக பிரபல நிறுவனங்கள் தங்களின் செல்போனை சலுகை விலையில் விற்பனை செய்கிறது. பல செல்போன் பிரியர்கள் மற்றும் ஸ்மார்ட்போனை மாற்ற நினைத்த நபர்களுக்கும் இது உதவியாக இருக்கிறது.

இன்று ரூ.30 ஆயிரத்திற்கு கீழ் செல்போன் வாங்க நினைப்பவர்களுக்கான, சிறந்த ஸ்மார்ட்போன்கள் குறித்த விபரங்களை தெரிந்துகொள்ளலாம். தற்போது சலுகை விலை விற்பனை நடப்பதால், ஸ்மார்ட்போன் வாங்க நினைத்த பலருக்கும் இந்த செய்தி உபயோகமானதாக இருக்கும் என்பதை புரிந்துகொண்டு, உங்களுக்கான ஸ்மார்ட்போனை எங்களின் லேட்டஸ்ட்லி தமிழ் பிரிவு 4 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்கிறது. உங்களுக்கு விருப்பமான ஸ்மார்ட்போனை தேர்வு செய்து நீங்கள் வாங்கலாம், உங்களுக்கு பிரயமானவர்களுக்கு பரிசும் கொடுக்கலாம்.

ரியல்மி நர்சோ 60 ப்ரோ (Realme Narzo 60 Pro): ரியல்மி நிறுவனத்தின் நர்சோ 60 ப்ரோ ஸ்மார்ட்போன், ஜூலை 2023ல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் 8GB+128GB, 12GB+256GB மற்றும் 12GB+1TB ஆகிய மாடல் விற்பனைக்கு கிடைக்கிறது. MediaTek Dimensity 7050 ப்ராசசர், 5000 mAh பேட்டரி, 100MP கேமிரா, 16 MP செல்பி கேமிரா உட்பட பல சிறப்பம்சத்துடன் சந்தையில் ரூ.32,999 க்கு விற்பனை செய்யப்பட்ட Realme Narzo 60 Pro ஸ்மார்ட்போன், தற்போது அமேசான் கிரேட் இந்தியன் (Great Indian Festival Deal on Amazon) விழாவை முன்னிட்டு ரூ.26,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. Benefits of Bathing: தினமும் குளிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் இவ்வுளவா?.. அசத்தல் நன்மைகள் இதோ.!  

Realme Narzo 60 Pro , Motorola Edge 40 Neo , Samsung Galaxy A34 , Vivo T2 Pro 5G (Photo Credit: Twitter)

மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ (Motorola Edge 40 Neo): மோட்டோரோலா நிறுவனத்தின் எட்ஜ் 40 நியோ ஸ்மார்ட்போன், கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. ரூ.20,999 முதல் விற்பனை செய்யப்பட்டது. 8GB RAM, 128 GB RAM வரை மாடல் உள்ளது. 12 GB RAM 256 GB internal Storage வசதியுடன் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.22,999 க்கு விற்பனை செய்யப்பட்டது. இரண்டு ஸ்மார்ட்போன்களை 50MP + 13 MP கேமிரா, 32 MP செல்பி கேமிராவை கொண்டுள்ளன. MediaTek Dimensity 7030 Processor இருப்பது, இதன் கூடுதல் சிறப்பம்சம் ஆகும். பிலிப்கார்ட் (Flipkart) தளத்தில் Motorola Edge 40 Neo ஸ்மார்ட்போன் விற்பனைக்கு உள்ளது.

சாம்சங் கேலக்சி ஏ34 (Samsung Galaxy A34): சாம்சங் நிறுவனத்தின் கேலக்சி ஏ4 ஸ்மார்ட்போன், 2023-ன் தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. Super AMOLED டிஸ்பிளே, 120 Hz புதுப்பிப்பு திறன் (Refresh Rate), 48MP+8MP+5MP கேமிரா, 10X Digital Zoom, 13 MP செல்பி கேமிரா, 8GB RAM + 128 GB Internal Memory, 1TB அளவு மெமரி போட்டுக்கொள்ளும் வசதி உட்பட பல்வேறு சிறம்பம்சத்துடன் Samsung Galaxy A34 ஸ்மார்ட்போன் களமிறங்கியது. ரூ.35,499 க்கு விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட்போன், தற்போது விழாக்கால சலுகை காரணமாக ரூ.27,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 8GB + 256 GB மாடல் ஸ்மார்ட்போன் ரூ.29,9999 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

விவோ டி2 ப்ரோ 5ஜி (Vivo T2 Pro 5G): விவோ நிறுவனத்தின் டி20 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன், கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. 8GB+128GB, 256GB Storage, 64MP+2MP கேமரா, 16MP செல்பி கேமிரா, MediaTek Dimensity 7200 Processor, 3D Curved AMOLED, டிஸ்பிளே, 120 Hz புதுப்பிப்பு திறன் உட்பட பல அம்சத்துடன் ஸ்மார்ட்போன் அறிமுகமானது. இதில் 8GB+128GB ஸ்மார்ட்போன் ரூ.23,999 க்கும், 8GB+256GB ஸ்மார்ட்போன் ரூ.24,999 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.