செப்டம்பர் 02, நந்தியாலா (Andhra Pradesh News): ஆந்திர பிரதேச மாநிலத்தில் சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற நபரை, மக்கள் கையும் களவுமாக பிடித்து தூணில் கட்டி வைத்து தாக்கியுள்ள வீடியோ வைரலாக பரவி வருகின்றது. நந்தியாலா (Nandyal) மாவட்டம், அவுகு மண்டலம் காசிபுரம் கிராமத்தில் 7-ஆம் வகுப்பு மாணவியை, தாசையா என்ற நபர் பாலியல் பலாத்காரம் (Attempted Rape) செய்ய முயன்றுள்ளார். அப்போது, சிறுமி பயத்தில் சத்தமாக கத்தியுள்ளார். இதனைக்கேட்ட அப்பகுதி மக்கள், உடனடியாக சிறுமியை மீட்டனர். பின்னர், தப்பி ஓட முயன்ற தாசையாவை மடக்கி பிடித்தனர். Passport Seva: பாஸ்போர்ட் சேவா போர்டல் சேவை மீண்டும் தொடக்கம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
இதனையடுத்து, அவரை தூணில் கட்டி வைத்து பலமாக தாக்கியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவரை மீட்டு, காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குற்றவாளியை தூணில் கட்டி வைத்து அடிக்கும் வீடியோ:
బాలికపై అత్యాచారయత్నం చేసిన వ్యక్తికి దేహశుద్ది చేసిన ప్రజలు
నంద్యాల - అవుకు మండలం కాశిపురం గ్రామంలో ఏడో తరగతి చదువుతున్న విద్యార్థినిపై అత్యాచారయత్నం చేసిన దాసయ్య.
బాలిక కేకలు వేయటంతో దాసయ్యను పట్టుకున్న స్థానికులు.. కట్టేసి కొట్టి, నిందితుడిని పోలీసులకు అప్పగించిన స్థానికులు. pic.twitter.com/BqVHR7ks2D
— Telugu Scribe (@TeluguScribe) September 2, 2024