Husband Kills Wife and Son: மனைவி, மகன் கழுத்து நெரித்து கொலை.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!
மும்பையில் மனைவி, மகனை கொன்று நாடகமாடிய கணவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஜனவரி 30, மும்பை (Maharashtra News): மகாராஷ்டிர மாநிலம், மும்பை (Mumbai) நகரின் கண்டிவலி பகுதியைச் சேர்ந்தவர் சிவசங்கர் தத்தா (வயது 40). இவருக்கு புஷ்பா (வயது 36) என்ற மனைவியும், ஒரு மகனும் இருந்தனர். இந்நிலையில், வீட்டில் தனது மனைவி புஷ்பாவும் மகனும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக சிவசங்கர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். Man Stabbed To Death: தாயுடன் கள்ளத்தொடர்பில் இருந்த நபர்; பலமுறை எச்சரித்தும் நீடித்த உறவு.., ஆத்திரத்தில் மகன்கள் வெறிச்செயல்..!
நாடகமாடிய நபர் கைது:
இதன் விசாரணையில், சிவசங்கர் தத்தா, முன்னுக்கு பின் முரணாக பதிலளித்து வந்துள்ளார். இதனால் அவர் மேல் சந்தேகமடைந்த காவல்துறையினர், அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அதில், மனைவி மற்றும் மகனை தான் கொலை செய்ததாக அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். மேலும் விசாரணையில், மனைவி தனக்கு துரோகம் செய்ததாக சிவசங்கர் சந்தேகமடைந்துள்ளார். இதில், ஆத்திரமடைந்த அவர், நைலான் கயிற்றை கொண்டு மனைவியின் கழுத்தை நெரித்து கொலை (Murder) செய்தார். இதனை மகன் நேரில் பார்த்துவிட்டதால், அவனையும் சிவசங்கர் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து, காவல்துறையினர் அவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
(The above story first appeared on LatestLY on Jan 30, 2025 01:16 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

