Woman Raped By YouTuber: இளம்பெண் பாலியல் பலாத்காரம்.. வீடியோ எடுத்து மிரட்டிய யூடியூபர் கைது..!
கேரளாவில் பக்கத்துவீட்டு இளம்பெண்ணை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய யூடியூபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
நவம்பர் 26, திருவனந்தபுரம் (Kerala News): கேரள மாநிலம், திருச்சூர் (Thrissur) அருகே சாலக்குடியைச் சேர்ந்தவர் பினீஷ் பென்னி (வயது 32). இவர், யூடியூப் சேனல் ஒன்று நடத்தி வருகிறார். இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த இளம்பெண்ணின் குழந்தை பினீஷ் வீட்டிற்கு விளையாட செல்வது வழக்கம். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு விளையாடச் சென்ற குழந்தையை அழைப்பதற்காக பினீஷின் வீட்டுக்கு இளம்பெண் சென்றுள்ளார். Google Map Wrong Direction: கூகுள் மேப்பை நம்பியதால் துயரம்.. கார் விபத்தில் சிக்கி 3 பேர் பலி.. வாகன ஓட்டிகளே உஷார்.!
அப்போது, அவர் ஒரு அறையில் அடைத்து வைத்து இளம்பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் (Sexual Assault) செய்துள்ளார். மேலும், அதனை வீடியோ எடுத்து வைத்துள்ளார். பின்னர், இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடப்போவதாக மிரட்டி மீண்டும் அவரை பாலியல் பலாத்காரம் (Rape) செய்ய முயன்றுள்ளார். இதுகுறித்து, இளம்பெண் தனது கணவரிடம் தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து, அவரது கணவர் சாலக்குடி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து, பினிஷ் பென்னியை காவல்துறையினர் கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே ஒரு பெண்ணை பலாத்காரம் செய்தது மற்றும் விசா மோசடி செய்தது ஆகிய வழக்குகள் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
(The above story first appeared on LatestLY on Nov 26, 2024 11:10 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

