Gang Rape (Photo Credit: Pixabay)

நவம்பர் 15, இந்தூர் (Madhya Pradesh News): மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் (Indore) 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் (Sexual Assault) செய்த வழக்கில் சிறுவன் மற்றும் 19 வயது வாலிபர் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில், இவர்கள் இருவரும் சிறுமியின் ஆண் நண்பருக்கு தெரிந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்தனர். Surgery Gone Wrong: "ஆட்டோ கண்ணாடிய திருப்புனா வண்டி எப்படி போகும்?" இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்.!

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கும் அவரது ஆண் நண்பருக்கும் இடையே கொஞ்ச நாட்களாகவே பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்நிலையில், பிரச்சனையை தீர்த்து செய்து வைப்பதாக கூறி இவர்கள் இருவரும் சிறுமியை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்து கூட்டு பலாத்காரம் (Gang Rape) செய்துள்ளனர். இதுதொடர்பாக சிறுமி அளித்த புகாரின்பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.