Young Woman Gang Rape: 21 வயது பெண்ணை மரத்தில் கட்டி வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம்.. குற்றவாளியின் உருவப்படம் வெளியீடு..!
புனேயில் 21 வயது இளம்பெண்ணை மரத்தில் கட்டி வைத்து, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளியின் ஓவியத்தை காவல்துறையினர் வெளியிட்டு அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
அக்டோபர் 05, புனே (Maharashtra News): மகாராஷ்டிர மாநிலம், புனேயில் (Pune) நேற்று முன்தினம் (அக்டோபர் 03) இரவு புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் 21 வயது பெண்ணை கூட்டுப் பலாத்காரம் (Gang Rape) செய்து அவரது ஆண் நண்பரைத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புனேவின் போப்தேவ் காட் பகுதியில் நேற்று முன்தினம் இரவு காரில் இருவர் சென்றுள்ளனர். அப்போது, 3 பேர் அதிகாரி போல் தன்னைக் காட்டிக் கொண்டு அவர்களை அணுகினர். மேலும், தம்பதிகள் தடைசெய்யப்பட்டதாகக் கூறி இருவரையும் புகைப்படம் எடுத்தனர். Former Cricketer Mother Dies: முன்னாள் கிரிக்கெட் வீரர் சலில் அன்கோலாவின் தாயார் சடலமாக மீட்பு.. காரணம் என்ன..?
அப்போது, அதில் ஒருவர் அந்தப் பெண்ணை மிரட்டி, வலுக்கட்டாயமாக தனது காரில் ஏற்றிச் சென்றார். அவளை வேறு இடத்திற்கு ஓட்டிச் சென்ற பிறகு, காரை நிறுத்தி, பெண்ணின் நண்பரைத் தாக்கி மரத்தில் கட்டி வைத்தனர். பின்னர், அந்த இளம்பெண்ணை மூவரும் பாலியல் பலாத்காரம் (Rape) செய்துவிட்டு, அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதனையடுத்து, அவரது ஆண் நண்பர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தார். மேலும், இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின்பேரில், தலைமறைவான இருவரின் ஓவியங்களை (Sketches Of Accused) புனே காவல்துறையினர் நேற்று (அக்டோபர் 04) வெளியிட்டனர். இந்த வழக்கில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், பாலியல் பலாத்காரம் (Sexual Assault) செய்யப்பட்ட பெண்ணின் ஆண் நண்பர் அளித்த வாக்குமூலத்தின்படி, மூன்று பேரில் இருவரை சித்தரித்து ஓவியங்கள் உருவாக்கப்பட்டது. இந்த ஓவியத்தின் அடிப்படையில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க 14 தனிப்படை குழுக்கள் அமைக்கப்பட்டு தேடி வருகின்றனர். இதனிடையே புனேவில் உள்ள சாசூன் பொது மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட பெண் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
(The above story first appeared on LatestLY on Oct 05, 2024 01:08 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

