PM Modi: தன் காலில் விழுந்தவர் பாதத்தை தொட்டு வணங்கிய பிரதமர் மோடி.. வைரலாகும் வீடியோ உள்ளே..!

டெல்லியில் நடந்த பேரணியின் போது, ​​பாஜக வேட்பாளர்கள் தனது கால்களைத் தொடுவதை பிரதமர் மோடி தடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

PM Modi: தன் காலில் விழுந்தவர் பாதத்தை தொட்டு வணங்கிய பிரதமர் மோடி.. வைரலாகும் வீடியோ உள்ளே..!
PM Modi (Photo Credit: @kalyanvarm99877 X)

ஜனவரி 30, புதுடெல்லி (New Delhi): மகாத்மா காந்தி நினைவு நாள் நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது. இது தவிர இந்திய சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு உயிர் நீத்த தியாகிகள் நாளாகவும் இன்றைய தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையடுத்து டெல்லி ராஜ் காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி (PM Modi) உள்ளிட்டோரும், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்க்கே உள்ளிட்டோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். Teacher Sexually Assaulted Boy: 10 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டல்.. ஆசிரியை மீது வழக்குப்பதிவு..!

வேட்பாளர் பாதத்தை தொட்டு வணங்கிய பிரதமர் மோடி:

இதற்கிடையே நேற்று கோண்டாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற பேரணியில், டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா அனைத்து கட்சி வேட்பாளர்களையும் மேடைக்கு அழைத்தார். அவர்கள் மோடியின் அருகில் சென்றபோது, ​​பலர் அவரது பாதங்களைத் தொட்டு வணங்கினர். அவர்களில், பட்பர்கஞ்ச் கட்சியின் வேட்பாளர் ரவீந்தர் சிங் காலில் விழுந்த போது தடுத்து, அவர் காலில் பிரதமர் மோடி விழுந்தார். இதன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

வீடியோ இதோ:

(The above story first appeared on LatestLY on Jan 30, 2025 02:58 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).