H Raja Angry: "தமிழகம் உருப்படாது., கஞ்சா போதையில் கட்டுக்கடங்காமல் ஆடும் கல்லூரி மாணவர்கள்" - எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு.!
கஞ்சா போன்ற போதை வஸ்துக்களின் விற்பனை திமுக அரியணை ஏறியபின்தான் அதிகரித்துள்ளது என பாஜக மூத்த தலைவர் பரபரப்பாக பேசினார்.
டிசம்பர், 27: கஞ்சா போன்ற போதை வஸ்துக்களின் விற்பனை திமுக அரியணை ஏறியபின்தான் (H Raja About Cubbins) அதிகரித்துள்ளது என பாஜக மூத்த தலைவர் பரபரப்பாக பேசினார்.
கோவையில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா (H Raja) பேசுகையில், "தமிழகம் என்பது கஞ்சா நாடாகியுள்ளது. சில மாதங்களுக்கு முன் பேராவூரணி, தஞ்சாவூரில் 850 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. அது எப்படி தமிழகத்திற்குள் வந்தது?. திண்டுக்கல்லில் 400 கிலோ கஞ்சா பிடிபட்டுள்ளது.
தினமும் தொலைக்காட்சியை பார்த்தாலே தமிழ்நாடு முழுவதும் வெவ்வேறு இடங்களில் இருந்து கிலோ கணக்கில் கஞ்சா பறிமுதல் செய்யப்படுகிறது. தமிழ்நாடு முதல்வராக மு.க ஸ்டாலின் ஆட்சிப்பொறுப்பேற்றதும் கஞ்சா விற்பனை அமலுக்கு வந்துள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் போதையில் இருக்கிறார்கள். Violence: மரித்துப்போன மனிதம்.. 20 வயது இளம்பெண்ணை 24 மணிநேரமும் வேலைசெய்ய வற்புறுத்தி சித்ரவதை.. பகீர் வீடியோ வைரல்.!
தாம்பரம் பக்கம் இருக்கும் கல்லூரி வழியே சாலையில் செல்ல இயலாத அளவு மாணவர்கள் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். இதற்கு பெயர்தான் திராவிட மாடல். என்னிடம் திராவிட மாடல் என்றால் என்ன? என கேட்டார்கள். திருமணம் கடந்த உறவை வைப்பது திராவிடமாடல். இதனை சுப.வீ கூறினார். நான் கூறவில்லை. கருப்புச்சட்டைக்காரர்கள் மிககேவலாக இருக்கிறார்கள். அவர்களை ஆட்சிக்கட்டிலில் இருந்து விரட்டியடிக்க வேண்டும். இல்லையன்றால் தமிழகம் உருப்படாது" என்று தெரிவித்தார்.
(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 27, 2022 10:11 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).
(The above story first appeared on LatestLY on Jan 12, 2023 12:34 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

