Formation Of The NDA Government: மீண்டும் பிரதமராகும் நரேந்திர மோடி.. ஜூன் 8ம் தேதி பதவியேற்பு..!

ஜூன் 8-ந் தேதி மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்க இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Formation Of The NDA Government: மீண்டும் பிரதமராகும் நரேந்திர மோடி.. ஜூன் 8ம் தேதி பதவியேற்பு..!
PM Narendra Modi (Photo Credit: YouTube)

ஜூன் 05, புதுடெல்லி (New Delhi): 2024 மக்களவை தேர்தலில் 292 தொகுதிகளில் வெற்றியடைந்துள்ள பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான கூட்டணி, 18 வது மக்களவை அரசை ஏற்க பாஜக தயாராகி வருகிறது. 235 தொகுதிகளில் கூட்டணியுடன் வெற்றி அடைந்துள்ள காங்கிரஸ் கட்சி, பெரும்பான்மைக்கு தேவையான எஞ்சிய 37 தொகுதிகளை மாநில வாரியாக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகளை வைத்து கைப்பற்றவும் காய் நகர்த்தி வருகிறது. Best VR Headset: அனைவரையும் கவரும் விர்ச்சுவல் ரியாலிட்டி.. எது வாங்கலாம்? விபரம் உள்ளே..!

இந்த நிலையில் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஜூன் 8-ந் தேதி மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்கவும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் பிரதமராக 3-வது முறையாக மோடி பதவியேற்க இருக்கிறார்.

(The above story first appeared on LatestLY on Jun 05, 2024 01:52 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).