Punjab Murder: தாய்-மகள் சுட்டுக்கொலை; மர்ம நபர்கள் வெறிச்செயல்.. காரணம் என்ன?.. பதறவைக்கும் சம்பவம்.!

இரண்டு பேர் கும்பலால் தாய் - மகள் கொலை செய்யப்பட்ட பயங்கரம் ஜலந்தர் பகுதியை பதறவைத்துள்ளது.

Punjab Murder: தாய்-மகள் சுட்டுக்கொலை; மர்ம நபர்கள் வெறிச்செயல்.. காரணம் என்ன?.. பதறவைக்கும் சம்பவம்.!
Jalandhar Murder Case (Photo Credit: Twitter)

அக்டோபர் 18, ஜலந்தர் (Punjab News): பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜலந்தர் (Jalandhar, Punjab) பகுதியை சேர்ந்த பெண்மணி ரஞ்சித் கவுர் (வயது 50). இவரின் மகள் குர்ப்ரீத் கவுர் (வயது 32). இவரின் கணவர் அமெரிக்காவில் வேலை பார்த்து வருகிறார். இதனால் அவரின் தாயாருடன் தங்கி இருக்கிறார்.

சம்பவத்தன்று இருவரும் தங்களின் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் கொண்ட மர்ம நபர்கள், தாய்-மகளை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்து அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

துப்பாக்கிச்சத்தம் கேட்டு அதிர்ந்துபோன அக்கம் பக்கத்தினர், ஜலந்தர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலை அறிந்ததும் நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளனர். Gaza Hospital Attack: காசாவில் மருத்துவமனை மீது தாக்குதல்; கைவிரிக்கும் இஸ்ரேல்., குற்றச்சாட்டை முன்வைக்கும் பாலஸ்தீனிய அதிகாரிகள்.! 

அப்போது, தாய்-மகள் இருவரும் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது. மேலும், தாயின் உடலில் பெட்ரோல் ஊற்றிய கயவர்கள், உடலுக்கு தீவைத்து தப்பி சென்றுள்ளனர்.

இருவரின் உடலையும் மீட்ட காவல் துறையினர், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த காவல் துறையினர், குற்றவாளிகளுக்கு வலைவீசி இருக்கின்றனர்.

(The above story first appeared on LatestLY on Oct 18, 2023 12:49 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).