Sexual Assault | File Picture (Photo Credit: Pixabay)

ஜனவரி 23, பாட்டியாலா: பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பாட்டியாலா (Patiala, Punjab), பால்பேக்ரா கிராமத்தை சேர்ந்த 11 வயது சிறுமி (11 Aged Minor Girl), கடந்த சனிக்கிழமை தனது வீட்டருகே இருக்கும் மாமாவின் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் இரவு 8 மணியளவில் தனது வீட்டிற்கு தனியாக திரும்பிக்கொண்டு இருந்துள்ளார்.

அப்போது, அவ்வழியே காரில் வந்த இரண்டு பேர் கும்பல், (Girl Kidnpped) சிறுமியை கடத்தி சென்றுள்ளது. அவரை ஓடும் காரிலேயே பாலியல் பலாத்காரம் செய்த கும்பல் (Girl Raped Running Car), ஒருவர் மாறி ஒருவர் என அத்துமீறியுள்ளது.

பின்னர் இதுகுறித்து யாரிடமும் கூறக்கூடாது என மிரட்டி ஊரின் வெளியில் விட்டுவிட்டு சென்றுள்ளது. இதற்கிடையில், மகள் வீட்டிற்கு வந்து சேராததால் பதறிப்போன பெற்றோர் (Parents), அவரை தேடி அலைந்து இறுதியில் ஊரின் வெளியே மீட்டனர். Erode Bypoll DMDK: “நாங்கதான் வெற்றி பெறுவோம்”.. ஈரோடு இடைத்தேர்தலில் தனித்து களமிறங்குறது தேமுதிக – பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேட்டி.. சூடேறும் அரசியல்களம்..!

Sexual Assault (File Photo)

அவரின் ஆடைகள் கிழிந்து இருப்பதை கண்டு அதிர்ச்சியுடன் விசாரித்தபோது, இருவர் கும்பலால் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது. இதனையடுத்து, சிறுமியை அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்த பெற்றோர், விசயம் குறித்து பாட்டியாலா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

புகாரை ஏற்ற காவல் துறையினர் (Patiala Police) விசாரணை செய்து, இன்று சிறுமியை கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்த அமன்தீப்சிங் ஆமனி, தனீவீர் சிங் தள்ளி ஆகியோரை கூட்டுப்பாலியல் பலாத்காரம், போக்சோ உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் ஜனவரி 23, 2023 09:45 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).