மார்ச் 21, நாகயூர் (Rajasthan News): இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள நாகயூர், மாரோத் கிராமத்தை சேர்ந்தவர் ஹமீத் கான். சம்பவத்தன்று சமூக வலைத்தளங்களில் 5 பேர் குழு ஹமீத் கானை கடுமையாக தாக்கி (Gang Attacked Man Cut off Nose), மூக்கை அறுப்பது போன்ற வீடியோ காட்சிகள் வைரலாகின. இந்த தகவலை அறிந்த காவல் துறையினர் விசாரணையை முன்னெடுப்பதற்குள், சம்பந்தப்பட்ட இளைஞரும் கெகல் (Gegal Police Station) காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் நடத்திய விசாரணைக்கு பின்னர், ஹமீத் கானின் மூக்கை அறுத்த 4 சகோதரர்களான பீர்பால் கான், இக்பால், ஹுசைன், அமின் (Birbal Khan, Iqbal, Hussain, Amin and Mehruddin) ஆகியோரையும், இவர்களின் தந்தையான மெஹ்ருதீனையும் கைது செய்தனர். விசாரணையில் கள்ளக்காதல் விவகாரத்தில் இளைஞரின் மூக்கு அறுக்கப்பட்டது அம்பலமானது. England MP Bob Blackman: இந்திய தேசிய கொடி காலிஸ்தானிய ஆதரவாளர்கள் போராட்ட விவகாரம்; இங்கிலாந்து எம்.பி அதிரடி கருத்து.!
மாரோத் பகுதியில் ஹமீத் கான் தனியாக வசித்து வந்த நிலையில், அவருக்கும் மேற்கூறிய சகோதரர்களின் தந்தை மெஹ்ருதீனின் மகள் ரஷியா பானோவுக்கும் (Razia Bano) இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. ரஷியா பானோவுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து கணவருடன் வசித்து வந்த நிலையில், அவர் ஹமீத்துடன் கள்ளக்காதல் உறவு கொண்டுள்ளார்.
இந்த பழக்கத்தால் இருவரும் கடந்த ஜனவரி மாதம் வீட்டை விட்டு வெளியேறி தனியாக வசிக்க தொடங்கியுள்ளனர். இந்த விவகாரம் மெஹ்ருதீன் மற்றும் அவரின் 4 மகன்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்த, கடந்த மார்ச் 18ம் தேதி இருவரையும் கண்டறிந்து கடுமையாக தாக்கி, ஹமீத் கானின் மூக்கை அறுத்துள்ளனர்.
பின்னர், இந்த விஷயம் தொடர்பான வீடியோவையும் அவர்கள் எடுத்து வைத்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். ஆனால், நேற்று ஹமீத் மற்றும் ரஷியா பனோ காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதே வேலையில் வீடியோ வைத்து காவலர்களும் விசாரணையை முன்னெடுத்துள்ளனர். இதனால் இறுதியாக மெஹ்ருதீன் மற்றும் அவரின் 4 மகன்களும் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
5 accused arrested in the case. Prima facie it emerged that a married woman had eloped with her lover Hamid. When the girl's father came to know about this, he separated the two. The girl's brothers & father cut off Hamid's nose and circulated the video: Rupinder Singh, IG Ajmer pic.twitter.com/Hj5zNaZa3I
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) March 20, 2023