Car Two Weeler Collision 3 Died: கார் - இருசக்கர வாகனம் மோதி பயங்கர விபத்து: மூவர் பலி., 2 பேர் படுகாயம்.!
குடும்ப விழாவுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பியவர்கள் வாகனம் மீது, சாலை விதிகளை மீறி பயணம் செய்த நபர்களின் வாகனம் மோதி விபத்திற்குள்ளானதில் மூவர் பலியாகினர், இருவர் படுகாயம் அடைந்தனர்.
மே 27, உதய்பூர் (Rajasthan News): இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதய்பூர் மாவட்டம், ஜடோல் பகுதியில் நேற்று இரவு இருசக்கர வாகனம் - கார் (Bike Car Collision in Udaipur) மோதிக்கொண்டு ஏற்பட்ட பயங்கர விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இரண்டு வாகனங்களும் மோதிக்கொண்ட விபத்தில், 3 பேர் உயிரிழந்த நிலையில், 2 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டனர். தகவல் அறிந்து வந்த அவசர ஊர்தி மீட்பு குழுவினர், காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இருசக்கர வாகனத்தில் மூவர் கும்பல் வந்த நிலையில், அவர்களின் வாகனம் கார் மீது மோதியதில், அவர்கள் மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். காரில் இருந்தவர்கள் லேசான தீக்காயத்துடன் உயிர்தப்பினர். BSP Candidate Injured: எடைக்கு எடை நாணயம் வழங்கும் நிகழ்வில் சோகம்; இளம் பெண் வேட்பாளரின் தலையில் விழுந்த தராசு.!
காவல்துறையினர் விசாரணை: குடும்ப நிகழ்ச்சிக்கு சென்ற நபர்கள் காரில் வீட்டிற்கு திரும்பியபோது விபத்து நடந்துள்ளது. காயமடைந்த இருவர் உதய்பூர் அரசு மருத்துவனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர். மேற்படி காவல் துறையினர் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
VIDEO | Three people were killed, while two others were injured after a car collided with a bike in Rajasthan's Udaipur earlier today. More details awaited. pic.twitter.com/SFUzBMIiaM
— Press Trust of India (@PTI_News) May 27, 2024
(The above story first appeared on LatestLY on May 28, 2024 01:56 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

