Rajinikanth: தலைவர் தரிசனம் கிடைத்த மகிழ்ச்சியில் ரசிகர்கள்.. விமான பயணத்தில் இன்ப அதிர்ச்சி.!
தனக்கு சொந்தமாக தனியாக ஜெட் விமானம் வைத்திருந்தாலும், பயணிகளுடன் பயணிகளாக எக்கனாமி வகுப்பில் பயணம் செய்த நடிகர் ரஜினிகாந்தின் செயல் பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
ஏப்ரல் 26, சென்னை (Cinema News): தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் (Rajinikanth), தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தில் (Jailer 2) நடிப்பு வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. அதனைத்தொடர்ந்து, ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படமும் விரைவில் வெளியாக உள்ளது. Actress Pavithra Lakshmi: நடிகை பவித்ரா லட்சுமிக்கு என்ன ஆச்சு? அவரே வெளியிட்ட தகவல்.. இப்படி ஒரு சோகமா? ரசிகர்கள் வேதனை..!
தலைவா என அழைப்பு:
இதனால் ரஜினியின் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் அடுத்தடுத்த படங்களுக்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் விமான பயணம் செய்தபோது, ரசிகர்கள் சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ரஜினி வருகிறார் என்பதை முன்பே அறிந்து இருந்த ரசிகர்கள், அவரை கைத்தட்டி, உரத்த ஆரோகாரத்துடன் குரலிட்டு 'தலைவா' என அழைத்து வரவேற்றனர்.
ரஜினி - ரசிகர்கள் மகிழ்ச்சி:
ரசிகர்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்ட நடிகர் ரஜினிகாந்த் தனது பாணியில் மலர்ந்த முகத்துடன் அனைவருக்கும் எளிமையாக நன்றியை தெரிவித்துவிட்டு தனது பயணத்தை தொடங்கினார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.