ஜனவரி 24: ஓடும் இரயிலில் ஏறுவதும், இறங்குவதும் நமது உயிருக்கே உலை வைக்கும் செயலாகும். இந்த ஒருகூற்றை நாம் கேட்காத நாட்களே இல்லை. ஏனெனில் ஆயிரக்கணக்கான மக்களை சுமந்து செல்லும் இரயிலின் பாகங்கள் அனைத்தும் அதன் எடையை தாங்கும் வகையில் அமைக்கப்பட்டு இருக்கும். நாம் செய்யும் சிறு அலட்சியத்தால் நமது உயிரோ அல்லது உடல் உறுப்புகளோ காணாமல் போய்விடும் என்பதற்கு சிறந்த உதாரணமாக ஒரு காணொளி மத்திய இரயில்வே காவல் துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோ உங்களின் பார்வைக்கு இணைக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், "இரயில்கள் சரியான நேரத்திற்கு வந்து செல்கிறது. இரயில் நிலையத்திற்கு சற்று முன்பு கிளம்பி வரவும். ஓடும் இரயிலில் ஏறவோ, இறங்கவோ முயற்சிக்க வேண்டாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. Chennai Peoples Affect Mosquitos: 6 மணிக்கு வீட்டின் கதவுகளை சாற்றும் சென்னை வாசிகள்.. ரீங்காரமிடும் கொசுக்களின் வளர்ச்சியால் மக்கள் வேதனை.!

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)