Makaravilakku 2025: இன்று மகரவிளக்கு பூஜை: ஜோதியை நேரலையில் காணுவது எப்படி? விபரம் உள்ளே.!
ஐயப்ப பக்தர்களின் வருகையால் சபரிமலை இன்று உச்சகட்ட திணறலுக்கு உள்ளாகப்போகும் நிலையில், கோவில் நிர்வாகம் சார்பில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இன்று மகரஜோதி கொண்டாடப்படுகிறது.
ஜனவரி 14, சபரிமலை (Kerala News): கேரளா மாநிலத்தில் உள்ள சபரிமலை (Sabarimala Ayyappa Temple) ஐயப்பன் கோவிலில்,14 ஜனவரி 2025 இன்று மகரவிளக்கு (Makaravilakku) பூஜை / மகர ஜோதி (Makara Jyothi) நிகழ்வு நடைபெறுகிறது. கார்த்திகை, மார்கழி மாதத்தில் விரதம் இருக்கத்தொடங்கிய பக்தர்கள் பலரும், ஸ்ரீ ஐயப்பனின் அருளைப்பெற சபரிமலை நோக்கி பயணம் செய்து இருந்தனர். இன்று மாலை 6 மணிக்கு மேல் மகரஜோதி நிகழ்வும் நடைபெறுகிறது. மகரஜோதி நிகழ்வை முன்னிட்டு கோவிலில் தரிசனம் செய்ய 50 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்ளுக்கு முன்னதாகவே ஆன்லைன் வழியாக அனுமதி வழங்கப்பட்டது. திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியத் தலைவர் பி.எஸ்.பிரசாந்த் தலைமையிலான அதிகாரிகள், மகரவிளக்கு நிகழ்ச்சியை பக்தர்கள் சிரமம் இன்றி கண்டுகளிக்க ஏற்பாடுகளை செய்துள்ளனர். மேலும், தொலைக்காட்சிகளில் நேரலையும் ஒளிபரப்பாகும். Avaniyapuram Jallikattu 2025: சீறிப்பாயும் காளைகள்., சிதறவிடும் காளையர்கள்.. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று.! நேரலை இங்கே.!
முன்னேற்பாடுகள் தீவிரம்:
இந்த நாளில் திரளாக வரும் பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்க 5 ஆயிரத்திற்கும் அதிகமான காவல்துறையினர் சபரிமலை, பம்பை பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர். இன்றைய நாளில் சுமார் 1.5 இலட்சம் பக்தர்கள் கோவிலுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், காலை 10 மணிக்கு மேல் பம்பையில் இருந்து நிலக்கல் நோக்கி வரும் வாகனங்கள் நிறுத்தப்படும். 10 மணிக்கு முன்னதாக வரும் வகணங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பிடம் என தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் நிர்வாகத்தின் சார்பில் செய்யப்பட்டுள்ளன. இன்றைய நாளில் மாலை 6 மணிக்கு மேல் ஐயப்ப பக்தர்கள் வீட்டில் இருந்தபடி தொலைக்காட்சி, நேரலை நிகழ்ச்சிகளிலும் மகர ஜோதியை கண்டுகளிக்கலாம்.
மகரவிளக்கு ஜோதியை நேரலையில் (Makaravilakku Live) கண்டு மகிழ ஜோதி டிவி நேரலையில் இணைந்திருக்கவும்:
சுவாமி ஐயப்பா சிறப்பு பாடல்கள் (Makara Jyothi Live):
(The above story first appeared on LatestLY on Jan 14, 2025 08:52 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

