Shakti Cyclone: உருவானது சக்தி புயல்.. தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை.. முக்கிய அப்டேட்!
சக்தி புயல் தாக்கத்தால் தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை (Weather Today) பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்றைய & நாளைய வானிலை நிலவரம் குறித்து காணலாம்.
செப்டம்பர் 04, நுங்கம்பாக்கம் (Chennai News): மத்திய மேற்கு, அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தெற்கு ஒரிசா கடலோரப் பகுதியில் கரையை கடந்துள்ளது. சௌராஷ்டிரா கடலோரப் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த பகுதி, ஒன்றாம் தேதி வாக்கில் வடகிழக்கு அரபிக் கடல் பகுதிகளுக்கு நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, இரண்டாம் தேதி வாக்கில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. மேற்கு வடமேற்கு திசையில் இது நகர்ந்து 3 ஆம் தேதி காலை 'சக்தி' புயலாக மாறி குஜராத்தின் துவாரகாவில் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து 5ஆம் தேதி மத்திய அரபிக் கடல் பகுதியில் நிலவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய வானிலை (Today Weather) :
சக்தி என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறக்கூடும். இதனால் இன்றும், நாளையும் தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், தர்மபுரி ஆகிய 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளைய வானிலையை பொறுத்தவரையில் மதுரை, சிவகங்கை, விருதுநகர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. புயலின் தாக்கத்தால் அக்டோபர் 9 ஆம் தேதி வரை மழை தொடர வாய்ப்புள்ளதாகவும், மத்திய மேற்கு அரபிக்கடலில் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. Gold Rate Today: ரூ.11,000ஐ நெருங்குகிறது 1 கிராம் தங்கம்.. தீபாவளிக்குள் தாறுமாறாக உயரப்போகும் தங்கம், வெள்ளி.. ஷாக் நிலவரம்.!
சென்னை வானிலை (Chennai Weather) :
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பை பொறுத்தவரையில், இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், அவ்வப்போவது கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-34° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
புயலின் நகர்வுகளை Windy இணையதள பக்கத்தில் நேரலையில் காணுங்கள் :
(The above story first appeared on LatestLY on Oct 04, 2025 12:11 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

