Couple Arrested: 4 வயது குழந்தையை விற்க முயன்ற தம்பதி.. 6 பேர் அதிரடி கைது..!

ஒடிசாவில் 4 வயது குழந்தையை விற்க முயன்ற பீகார் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Couple Arrested: 4 வயது குழந்தையை விற்க முயன்ற தம்பதி.. 6 பேர் அதிரடி கைது..!
Arrest (Photo Credit: Pixabay)

நவம்பர் 28, புவனேஸ்வர் (Odisha News): ஒடிசா மாநிலம், புவனேஸ்வர் (Bhubaneswar) படகடா பகுதியில் பீகாரைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் தங்களது 4 வயது மகளை விற்க முயன்றபோது கைது செய்யப்பட்டனர். அவர்கள், 40 ஆயிரம் ரூபாய்க்கு தங்கள் மகளை பிபிலியில் உள்ள ஒரு தம்பதியினருக்கு விற்க முடிவு செய்தனர். இதுகுறித்து, காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் குழந்தையை மீட்டனர். மேலும், குழந்தையை விற்க முயன்ற பீகார் தம்பதி உட்பட 6 பேரை கைது செய்தனர். Surrogate Woman Dies: வாடகைத்தாய் ஒன்பதாவது மாடியில் இருந்து விழுந்து பலி.. கொலையா..? தற்கொலையா?!

இதனையடுத்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், தம்பதி கடுமையான நிதி நெருக்கடியால் அவதிபட்டு வந்துள்ளனர். இதனால், இன்று (நவம்பர் 28) காலை நான்கு வயது குழந்தையை பிப்லி பகுதியில் உள்ள ஒரு தம்பதியினருக்கு ரூ. 40 ஆயிரத்துக்கு விற்க முயன்றுள்ளனர். இதுதொடர்பாக, கைது செய்யப்பட்ட 6 பேரிடம் காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).