Murder Blood (Photo Credit: Pixabay)

ஜனவரி 20, திருவனந்தபுரம் (Kerala News): கேரள மாநிலம், கோழிக்கோடு (Kozhikode) மாவட்டத்தில் உள்ள தாமரைசேரி பகுதியைச் சேர்ந்தவர் சுபைதா (வயது 53). இவரது மகன் ஆஷிக் (வயது 24). பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்தபின் ஆட்டோ மொபைல் இன்ஜினியரிங் படித்த இவர், போதைப் பொருள் பழக்கத்துக்கு அடிமையானார். இந்நிலையில், சுபைதாவுக்கு சில தினங்களுக்கு முன்பு மூளை புற்றுநோய் காரணமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதன்பின்னர், அவர் அருகிலுள்ள தன்னுடைய தங்கை ஷகீலாவின் வீட்டில் தங்கி இருந்துள்ளார்.  Viral Video: பைக்கில் குடும்பத்துடன் சென்றவர்களுக்கு நேர்ந்த அதிர்ச்சி.. நேருக்கு நேர் வந்த காட்டு யானை.. தப்பித்து ஓடிய வீடியோ உள்ளே.!

கழுத்தறுத்து கொலை:

இந்நிலையில், நேற்று முன்தினம் (ஜனவரி 18) ஷகீலா வெளியே சென்றிருந்தார். வீட்டில் தாய் சுபைதாவும், மகன் ஆஷிக்கும் மட்டும் இருந்தனர். அப்போது, திடீரென சுபைதாவுக்கும், ஆஷிக்கிற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த ஆஷிக் அரிவாளால் தனது தாய் சுபைதாவை சரமாரியாக (Murder) வெட்டினார். தாயின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

மகன் கைது:

இதுகுறித்து, தகவல் அறிந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு, சுபைதா கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ரத்தவெள்ளத்தில் சடலமாக கிடந்தார். இதனைத்தொடர்ந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோழிக்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஆஷிக்கை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.