செப்டம்பர் 10, கவுகாத்தி (Assam News): அசாம் மாநிலம், கவுகாத்தியில் (Guwahati) இந்திய தொழில்நுட்பக் கழகமான ஐ.ஐ.டி., (IIT) கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. இங்கு நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், கல்லூரி விடுதியில் (Hostel Room) உள்ள அறை ஒன்றில் இருந்த பிம்லேஷ் குமார் (வயது 21) என்பவர் சடலமாக கிடந்துள்ளார். உத்தர பிரதேசத்தை சேர்ந்த இவர், பி.டெக்., 3-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். Brave Schoolgirl Rescues Mother: தாய்க்காக ஆட்டோவையேத் தூக்கிய மகள்.. விபத்திலிருந்து தாயைக் காப்பாற்றிய சேய்.. வைரலாகும் வீடியோ..!
இதுகுறித்து சக மாணவர்கள் கூறுகையில், விடுதியில் அவர் தற்கொலை (Suicide) செய்து கொண்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து, இந்த சம்பவத்தை கண்டித்து அவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 9-ஆம் தேதி இதே கல்வி நிலைய வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்த உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த எம்.டெக். மாணவி சவுமியா என்பவர் தற்கொலை செய்துகொண்டார். ஒரு மாதம் கழித்து அதே 9-ஆம் தேதியில் மற்றொரு மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்:
Guwahati: A 21-year-old student at IIT Guwahati was found dead in his hostel room, sparking massive protests over the institute's mental health and welfare support systems.@IITGuwahati @DCKamrupMetro @mygovassam#iitguwahati #IIT #guwahati #guwahatinews #assam #protest pic.twitter.com/ZouPezpmqL
— nenewslive (@NENEWS24x7) September 10, 2024