CP Radhakrishnan: துணை ஜனாதிபதியாக பதவியேற்றார் சி.பி. ராதாகிருஷ்ணன்..!

துணை குடியரசு தலைவராக சி.பி ராதாகிருஷ்ணன் (CP Radhakrishnan Sworn) பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

CP Radhakrishnan Sworn (Photo Credit: YouTube)

செப்டம்பர் 12, டெல்லி (New Delhi News): இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவராக பதவி வகித்து வந்த ஜக்தீப் தன்கர், திடீரென தானாக முன்வந்து பதவிக்காலம் முடியும் முன்பே பதவியை ராஜினாமா செய்து அறிவித்தார். இது அரசியலில் பேசுபொருளானது. தொடர்ந்து, புதிய துணை குடியரசு தலைவரை தேர்வு செய்யும் பணிகளும் தீவிரமடைந்தன. பாஜக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் துணை குடியரசுத்தலைவர் வேட்பாளராக தமிழகத்தை சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணனும், காங்கிரஸ், திமுக கூட்டணி சார்பில் ஆந்திர பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த சுதர்சன் ரெட்டியும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இருவரும் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களிடம் மாநிலம்-மாநிலமாக சென்று வாக்கு சேகரித்து இருந்தனர். Google Gemini 3D Ai Photo Editing: கூகுள் ஜெமினி ஏஐ போட்டோ ட்ரெண்டிங்.. அரசியல் முதல் நிகழ்வு வரை.. கைவரிசையை காண்பிக்கும் நெட்டிசன்கள்.! 

சி.பி. ராதாகிருஷ்ண பதவி ஏற்பு:

இந்நிலையில், டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று முன்தினம் துணை குரியரசு தலைவருக்கான தேர்தலும் நடைபெற்று முடிந்தது. தேர்தல் முடிவில் பாஜக வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் 483 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சுதர்சன் தோல்வி அடைந்தார். இதனையடுத்து, இன்று (செப்டம்பர் 12) டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்குப்பின் தமிழருக்கு துணை குடியரசு தலைவர் பதவி கிடைத்துள்ளது.

சி.பி ராதாகிருஷ்ணன் பதவியேற்பு நேரலை (CP Radhakrishnan Sworn Live Video):

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement