12th Board Exam Result: வெளியானது 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2025: மாணவிகள் டாப்.. தேர்வு முடிவுகள் முழு விபரம் இதோ.!
12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 2025 (12th Exam Results 2025) இன்று காலை 9 மணியளவில் வெளியாகியுள்ளது. மாணவர்கள் தேர்வு முடிவுகளை tnresults.nic.in & dge.tn.gov.in ஆகிய வெப்சைட்டில் பார்க்கலாம்.
மே 08, சென்னை (Chennai News): தமிழ்நாடு மாநில பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்படும் பள்ளியில், கடந்த மார்ச் 3ம் தேதி முதல் 25ம் தேதி வரை 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 2025 (12th Exam Results 2025) நடைபெற்றது. இந்த தேர்வுகளை சுமார் 8 இலட்சத்து 21 ஆயிரம் பேர் எழுதி இருந்தனர். இந்நிலையில், இன்று தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை தேர்வு முடிவுகளை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.
12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2025 (HSC Board Exam Results 2025):
மாணவர்கள் tnresults.nic.in மற்றும் dge.tn.gov.in ஆகிய வெப்சைட்களுக்கு சென்று தங்களின் பிறந்த தேதி மற்றும் தேர்வு பதிவு எண் ஆகியவற்றை கொடுத்து உள்நுழைந்து (Login) முடிவுகளை தெரிந்துகொள்ளலாம். மாணவர்கள் பதிவு செய்த செல்போன் நம்பருக்கு குறுஞ்செய்தி வாயிலாக முடிவுகள் அனுப்பி வைக்கப்படும். சம்பத்தப்பட்ட பள்ளிகளிலும் மாணவர்களின் மதிப்பெண்ணை பதிவிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 12th Board Exam Result: 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 2025: ஆன்லைனில் பார்ப்பது எப்படி? விபரம் இதோ.!
தேர்ச்சி விகிதம்:
2024 - 2025 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவிகள் 96.70% தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 93.16% தேர்ச்சி அடைந்துள்ளனர். மொத்த தேர்ச்சி 95.03% ஆகும். மாணவர்களை விட மாணவிகள் 3.54% பேர் அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்வு எழுதிய 8.21 மாணவர்களில் 7,53,142 பேர் தேர்ச்சி அடைந்து உருகின்றனர். கடந்த ஆண்டை காட்டிலும் 0.47% தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. அரசுப்பள்ளிகளில் பயின்றோர் 91.94%, அரசு உதவிபெறும் பள்ளிகள் பயின்றோர் 95.71%, தனியார் பள்ளிகள் பயின்றோர் 98.88% தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசுப்பள்ளியில் அரியலூர், ஈரோடு, திருப்பூர், குமரி, கடலூர் ஆகியவை அரசுப்பள்ளியில் முதல் 5 தேர்ச்சி விகித இடங்களை பெற்றுள்ளது.
100 க்கு 100 மதிப்பெண் விபரம்:
இந்த பொதுத்தேர்வில் மாணவர்கள் 100 க்கு 100 மதிப்பெண் பெற்றும் சாதனை படைத்துள்ளனர். ஆனால், ஆங்கில தேர்வில் ஒருவர் கூட 100 மதிப்பெண் பெறவில்லை. தமிழில் 135 பேர், இயற்பியலில் 1,125 பேர், வேதியியலில் 3,181 பேர், உயிரியலில் 827 பேர், கணிதம் 3,022 பேர், தாவரவியல் 269 பேர், விலங்கியல் 36 பேர், கணினி அறிவியல் 9,536 பேர், வணிகவியல் 1,624 பேர், கணக்குப் பதிவியல் 1,240 பேர், பொருளியல் 556 பேர், கணினிப் பயன்பாடுகள் 4,208 பேர், வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் 273 பேர் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர்.
பிற அறிவிப்புகள்:
1. மாணவர்களின் மதிப்பெண் பட்டியலை 12.05. 2025 முதல் பள்ளிகள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
2. விடைத்தாள் கோரி 13.5.2025 முதல் 17.05.2025 விண்ணப்பக்கலாம்.
3. தேர்ச்சி பெறாத மாணவர்களின் துணைத்தேர்வு 25.6.2025 ஆண்டு நடைபெறும்.
4. 09.5.2025 அன்று துணைத்தேர்வுக்கு கால அட்டவணை அறிவிக்கப்படும்.
5. துணைத்தேர்வர்கள் பள்ளிகளில் துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
6. தனித்தேர்வர்கள் அரசு தேர்வர் இயக்க மையத்தில் விண்ணப்பிக்கலாம்.
7. துணைத்தேர்வுக்கு 12.05.2025 முதல் 31.05.2025 வரை விண்ணப்பிக்கலாம்.
(The above story first appeared on LatestLY on May 08, 2025 10:15 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

