Child Died: வாகன நிறுத்துமிடத்தில் உறங்கிய 3 வயது குழந்தை.. கார் சக்கரம் ஏறி இறங்கியதில் பரிதாப மரணம்; நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்.!

கார் நிறுத்துமிடத்தில் குழந்தையை பெற்றோர் தரையில் உறங்கவைத்து செல்ல, கார் இயக்கி வந்தவர் சரிவர கவனிக்காத காரணத்தால் 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

Child Died: வாகன நிறுத்துமிடத்தில் உறங்கிய 3 வயது குழந்தை.. கார் சக்கரம் ஏறி இறங்கியதில் பரிதாப மரணம்; நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்.!
Visual From CCTV Footage (Photo Credit: Twitter)

மே 25 , ஹைதராபாத் (Telangana News): தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத், ஹயாத் நகர் பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணா. இவரின் மனைவி கலால் துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.

ராமகிருஷ்ணா கட்டிடத்துறையில் உட்கட்டமைப்பு பொறியாளராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது வீட்டின் கார் நிறுத்தும் இடத்தில் காரை நிறுத்த முயற்சித்தார்.

அப்போது, அங்கு 3 வயதுடைய குழந்தை உறங்கிக்கொண்டு இருந்த நிலையில், அதனை கவனிக்காமல் குழந்தை மீது காரை ஏற்றி உள்ளார். இந்த சம்பவத்தில் குழந்தையை நிகழ்விடத்திலேயே பரிதாபமாக பலியானது.

Accident (File Pic)

இது குறித்து சி.சி.டி.வி கேமிரா காட்சிகள் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஹயாத் நகர் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் உயிரிழந்த குழந்தையின் பெற்றோர் அருகில் உள்ள கட்டிடத்தில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தனர்.

குழந்தையை அங்கு உறங்க விட்டு சென்ற நிலையில், வெளியே சென்று மீண்டும் வீட்டிற்கு வந்த ராமகிருஷ்ணா, சரிவர கவனிக்காது காரை இயக்கியத்தில், 3 வயது குழந்தையின் மீது சக்கரம் ஏறி இறங்கியுள்ளது.

குழந்தையின் பெற்றோர்கள் ராஜு மற்றும் கவிதா தம்பதிக்கு சொந்த ஊர் கர்நாடக மாநிலத்தில் உள்ள கலபுராகி மாவட்டம் ஆகும். இவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் வேலைக்காக ஹைதராபாத் வந்தடைந்தனர். அப்போதுதான் சோகமும் நடந்துள்ளது. தம்பதிகளுக்கு 7 வயதில் மகன், 3 வயதில் மகள் இருக்கும் சூழலில், விபத்தில் 3 வயது மகள் உயிரிழந்துள்ளார்.

(The above story first appeared on LatestLY on May 25, 2023 02:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).