BRS MLA Died in Accident: சாலை விபத்தில் எதிர்க்கட்சி பெண் எம்.எல்.ஏ உயிரிழப்பு; சோகத்தில் குடும்பத்தினர், தொண்டர்கள்.!
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேர்தலில் வெற்றிவாகை சூடி எம்.எல்.ஏ பொறுப்பு பெற்ற பெண், சாலை விபத்தில் பலியான சோகம் தெலுங்கானா மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிப்ரவரி 23, பதன்செரு (Telangana News): தெலுங்கானா மாநிலத்தில் உள்ள செகந்திராபாத் கண்டோன்மெண்ட் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் லஸ்யா நந்திதா (வயது 37). அம்மாநில சட்டப்பேரவையில் இளம் பெண் எம்.எல்.ஏக்களில் இவர் கவனிக்கத்தக்கவர்.
நேற்று இவர் அங்குள்ள பதன்செரு - ஓடிஆர் சாலையில் தனது காரில் பயணம் செய்துகொண்டு இருந்தார். அச்சமயம் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலைத்தடுப்பில் மோதி விபத்தில் சிக்கியது. Chennai Shocker: பூனையை பிடிக்க ஆசைப்பட்டு, கடப்பா கல் விழுந்து 5 வயது சிறுவன் பரிதாப பலி.. பெற்றோர்களே கவனம்.!
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த சட்டப்பேரவை உறுப்பினர் லஸ்யா நந்திதா (Lasya Nandita) பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். எம்.எல்.ஏ மறைவு அவரது கட்சியினர் மற்றும் தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த தேர்தலில் சட்டப்பேரவை உறுப்பினராக நந்திதா தேர்வு செய்யப்பட்ட நிலையில், அவர் விபத்தில் சிக்கி உயிரிழந்து இருக்கிறார்.
Telangana | BRS MLA from Secunderabad Cantonment, Lasya Nanditha died in a car accident at Patancheru ORR this morning when her car hit a divider.
BRS chief K. Chandrashekar Rao condoled her demise. pic.twitter.com/B9jZRRDr0P
— ANI (@ANI) February 23, 2024
(The above story first appeared on LatestLY on Feb 23, 2024 09:10 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

