Rape Accused Suicide: 14 வயது சிறுமி பலாத்கார வழக்கு; குற்றவாளி குளத்தில் குதித்து தற்கொலை..!
அசாமில் 14 வயது சிறுமியை பலாத்காரம் செய்த குற்றவாளி ஒருவர், குளத்தில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆகஸ்ட் 24, கவுகாத்தி (Assam News): அசாம் மாநிலம், நகோவான் () பகுதியில் டியூசன் சென்றுவிட்டு, சைக்களில் வீடு திரும்பிய 14 வயது சிறுமி பலாத்காரம் (Rape) செய்யப்பட்டார். பின்னர், அப்பகுதியில் இருந்த குளம் அருகே மயக்கநிலையில் கிடந்த சிறுமியை உள்ளூர்வாசிகள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது, 3 பேர் கூட்டு பலாத்காரம் (Gang Rape) செய்ததாக சிறுமி காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்தார். இச்சம்பவத்தை கண்டித்தும், சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். Nagarjuna N Convention Demolished: நீர்நிலைகளை ஆக்கிரமித்த நடிகர் நாகார்ஜுனா; பிரம்மாண்ட மண்டபத்தை இடித்து தள்ளிய அதிகாரிகள்..!
இதுதொடர்பாக மேற்கொண்ட விசாரணையில், தபாசுல் இஸ்லாம் உள்ளிட்ட இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 23) இரவு தபாசுல் இஸ்லாமை, சம்பவம் நடந்த குளத்திற்கு காவல்துறையினர் அழைத்து சென்றனர். அப்போது, அவர் தப்பியோட நினைத்து குளத்திற்குள் (Suicide) குதித்தார். உடனடியாக, காவல்துறையினர் நீச்சல் வீரர்களை அழைத்து அவரை தேடினர். தீவிர தேடுதலுக்குப் பின் இன்று (ஆகஸ்ட் 24) அதிகாலை 3 மணியளவில் தபாசுல் இஸ்லாம் சடலமாக மீட்கப்பட்டார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
#WATCH | The body of the prime accused of the Dhing gang rape incident in Assam's Nagaon district, Tafazul Islam recovered from a pond. The police had earlier arrested him in connection with the case.
"When a police team took him last night to the spot for investigation where… pic.twitter.com/ow29EJ37j7
— ANI (@ANI) August 24, 2024
(The above story first appeared on LatestLY on Aug 24, 2024 01:42 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

