Young Woman Sexual Harassment: வீட்டிற்குள் பூட்டி வைத்து இளம்பெண் பாலியல் பலாத்காரம்.. ஆட்டோ ஓட்டுநர் கைது..!
மத்திய பிரதேசத்தில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் இளம்பெண்ணை வீட்டிற்குள் பூட்டி வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நவம்பர் 11, போபால் (Madhya Pradesh News): மத்திய பிரதேச மாநிலம், போபாலில் (Bhopal) டீலா ஜமால்புரா பகுதியில் 32 வயதான பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர், அப்பகுதியில் உள்ள வீடுகளில் வீட்டு வேலை செய்து வருகிறார். அதே பகுதியில் சஜித் என்பவர் ஆட்டோ ரிக்ஷா ஓட்டி வருகிறார். அந்த பெண்ணுக்கும் ஆட்டோ ரிக்ஷா ஓட்டும் சஜித்திற்கும் ஏற்கனவே அறிமுகம் இருந்துள்ளது. SC Chief Justice Oath: உச்ச நீதிமன்றத்தின் 51-வது தலைமை நீதிபதியாக பதவியேற்பு.. யார் அந்த சஞ்சீவ் கண்ணா?!
இந்நிலையில், சஜித் கடந்த நவம்பர் 08-ஆம் தேதி அன்று அந்த பெண்ணிடம் உன்னை எனது தாய் பார்க்க வேண்டும் என்று கூறியதாக தெரிவித்திருக்கிறார். அந்த பெண்ணும் ஏற்கனவே சஜித் அறிமுகம் என்பதால், அவரும் நம்பி சஜித்தின் வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால், வீட்டில் உள்ளே யாரும் இல்லை என்று அந்த பெண் சந்தேகமடைந்து வீட்டில் இருந்து வெளியேற முயற்சி செய்துள்ளார். அப்போது, திடீரென வீட்டின் கதவை பூட்டிய சஜித், அந்த பெண்ணிடம் அத்துமிறீ பாலியல் வன்கொடுமை (Sexual Assault) செய்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து, அந்த பெண்ணின் அலறல் சத்தம்கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினரை பார்த்து, சஜித் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதன்பின்னர், பாதிக்கப்பட்ட பெண் காவல்நிலையத்தில் சஜித் மீது புகார் அளித்தார். புகாரின்பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய சஜித்தை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் (நவம்பர் 09) சஜித்தை கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
(The above story first appeared on LatestLY on Nov 11, 2024 06:42 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

