Girl Brutally Killed By Boyfriend: காதலியை 20 துண்டுகளாக வெட்டி புதைத்த கொடூரம்.. காதலன் வெறிச்செயல்..!

தெலுங்கானாவில் காதலன் தனது காதலியை 20 துண்டுகளாக வெட்டி, சாக்கு மூட்டையில் கட்டி வயலில் புதைத்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Girl Brutally Killed By Boyfriend: காதலியை 20 துண்டுகளாக வெட்டி புதைத்த கொடூரம்.. காதலன் வெறிச்செயல்..!
Girl Brutally Killed By Boyfriend (Photo Credit: @TeluguScribe X)

நவம்பர் 13, ஐதராபாத் (Telangana News): தெலுங்கானா மாநிலம், பத்ராத்திரி கொத்தகுடேம் (Bhadradri Kothagudem) மாவட்டத்தில் ஜூலுருபாடு அருகே உள்ள மசினேனிப்பேட்டையை சேர்ந்தவர் வீரபத்ரம். இவர், சுவாதி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சிங்கரேணியில் வேலை வாங்கித் தருமாறு ஒரு தம்பதி கேட்டுள்ளனர். அதற்காக ரூ. 16 லட்சத்தை இவர்கள் இருவரும் வாங்கியுள்ளனர். Traffic Violation In Bengaluru: போக்குவரத்து விதிமீறலால் ரூ. 30.57 லட்சம் அபராதம்.. போக்குவரத்து காவல்துறை அதிரடி..!

இந்நிலையில், வேலை கிடைக்காததால் பாதிக்கப்பட்டவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். அந்த 16 லட்சம் தொடர்பாக சுவாதிக்கும், வீரபத்ரனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால், கடந்த 3 நாட்களுக்கு முன்பு, தனது காதலி சுவாதியை வீரபத்ரம் கொடூரமான முறையில் கொன்று (Murder), 20 துண்டுகளாக வெட்டி, சாக்கு மூட்டையில் போட்டு, வயலில் புதைத்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கொலை செய்த காதலன் வீரபத்ரனை கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதலியை கொடூரமாக கொன்ற காதலன்:

(The above story first appeared on LatestLY on Nov 13, 2024 04:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).