ஏப்ரல் 16, மும்பை (Maharashtra News): மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சத்ரபதி சம்பாஜி நகரில் உள்ள காஞ்சனர் கிராமத்தில் வசித்து வருபவர் சந்தோஷ் தக்வாலே. இவர் உணவகம் (Hotel Employee) ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவருடைய முதல் மனைவி உயிரிழந்துவிட்ட நிலையில், இவர் வேறொரு பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். முதல் மனைவிக்கு பிறந்த சோகம் (வயது 12) என்ற மகனும், சிவானி (வயது 8) மற்றும் திபானி (வயது 7) என்ற இரு மகள்களும் இருந்துள்ளனர். Benefits Of Sugarcane Juice: கரும்புச் சாறில் உள்ள பலன்கள் என்னென்ன..? – விவரம் உள்ளே..!

இந்நிலையில், தனது 3 குழந்தைகளையும் ஜல்னா மாவட்டத்தில் உள்ள அம்பாத் தாலுகாவில் இருக்கின்ற தோமேகாவ் கிராமத்திற்கு கூட்டிச் சென்றுள்ளார். பின்னர், சம்பவ நாளன்று யாரும் இல்லாத நேரம் பார்த்து, திடீரென அங்கிருந்த கிணற்றில் தனது 3 பிள்ளைகளையும் தூக்கி வீசியுள்ளார். இதனால் குழந்தைகள் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர். இதுகுறித்து, அவரே காவல்துறையினருக்கு தனது செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தகவல் அளித்துள்ளார். பின், தனது செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டார்.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்ற காவல்துறையினர், கிணற்றில் இறந்து கிடந்த 3 குழந்தைகளையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சேர்த்தனர். இச்சம்பவம் தொடர்பாக, சந்தோஷ் தக்வாலே என்பவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகியுள்ள அவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தந்தை தான் பெற்ற பிள்ளைகளை கிணற்றில் வீசி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.