Husband-Wife Shot Dead: கணவன்-மனைவி துப்பாக்கியால் சுட்டுக்கொலை.. சிறுவன் தப்பியோட்டம்..!
உத்தர பிரதேசத்தில் கணவன் மனைவி இருவரையும் சிறுவன் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜூலை 18, லக்னோ (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், லக்னோவில் தக்ரோகி பகுதியை சேர்ந்த தம்பதி ராஜேந்திர சிங் (வயது 62)-சரோஜ். ராஜேந்திர சிங் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆவார். இவர், தனது மனைவி மற்றும் மகனுடன் வசித்து வந்துள்ளார். இவர்களுடன் ராஜேந்திர சிங்கின் சகோதரி மற்றும் அவரது மகனும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். Young Woman Died: செல்ஃபி மோகத்தில் சோகம்; 300 அடி பள்ளத்தில் விழுந்த இளம்பெண்.. 6 மணிநேரம் துடிதுடித்து பலி..!
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ராஜேந்திர சிங்கிற்கும், அவரது சகோதரிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த ராஜேந்திர சிங் சகோதரியின் மகன், திடீரென வீட்டில் இருந்த துப்பாக்கியை (Shot Dead) எடுத்து ராஜேந்திர சிங் மற்றும் அவரது மனைவி, மகன் ஆகிய 3 பேரையும் சுட்டுள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். அவர்கள் 3 பேரும் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து கிடந்துள்ளனர். இதனையடுத்து, அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அப்போது, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ராஜேந்திர சிங் மற்றும் அவரது மனைவி சரோஜ் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களது மகன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
(The above story first appeared on LatestLY on Jul 18, 2024 03:14 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

