ஜனவரி 11, போபால் (Madhya Pradesh News): மத்திய பிரதேச மாநிலம், தேவாஸ் (Dewas) பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் பட்டிதர். இவர், ஏற்கனவே திருமணமான நிலையில், பிங்கி பிரஜாபதி (வயது 30) என்ற பெண்ணுடனும் கடந்த 5 ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வந்துள்ளார். பிங்கி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு, சஞ்சய் பட்டிதரை தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அவர் பிங்கியை கொலை (Murder) செய்து, வீட்டில் உள்ள பிரிட்ஜில் (Fridge) உடலை வைத்துள்ளார். சுமார் 8 மாதங்களாக உடல் பிரிட்ஜில் இருந்ததால், தூர்நாற்றம் வீச ஆரம்பித்துள்ளது. AAP MLA Gurpreet Gogi Dies: குண்டு காயத்துடன் இறந்து கிடந்த ஆம் ஆத்மி எம்எல்ஏ.. அதிர்ச்சிகர சம்பவம்..!
பெண் படுகொலை:
இதனால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், உடனே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின்பேரில், காவல்துறையினர் பட்டிதரின் வீட்டுக்கு வந்து சோதனை செய்தனர். அப்போது, பிரிட்ஜை திறந்து பார்த்தபோது, உள்ளே அழுகிய நிலையில் சேலை அணிந்திருந்தவாறு பெண்ணின் உடல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அந்தப்பெண்ணின் சடலத்தை மீட்ட காவல்துறையினர், அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
உடல் அழுகிய நிலையில் மீட்பு:
இதுகுறித்து காவல்துறையினர் தரப்பில் கூறுகையில், 'கடந்த ஜூன் மாதமே அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். உடலை பிரிட்ஜில் வைத்ததால் வெளியே தெரியாமல் இருந்து வந்துள்ளது. பின், அவரது குடியிருப்புக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், உடல் அழுகி தூர்நாற்றம் வீசியுள்ளது. இதனால், இந்த விவகாரம் வெளியே தெரியவந்துள்ளது' என தெரிவித்தார்.
பிரிட்ஜில் பெண்ணின் சடலம் மீட்பு:
Dewas, Madhya Pradesh: A woman's dead body was found in a house in Vrindavan Dham Colony. The body was found inside a fridge in a locked room. Police are investigating the matter pic.twitter.com/JO2z4NKN9D
— IANS (@ians_india) January 10, 2025