Son Kills Father: 30 வயதாகியும் திருமணம் ஆகாத விரக்தி.. தந்தை கொடூர கொலை..!

கர்நாடகாவில் தனக்கு திருமணம் செய்து வைக்காததால் தந்தையை மகன் கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Son Kills Father: 30 வயதாகியும் திருமணம் ஆகாத விரக்தி.. தந்தை கொடூர கொலை..!
Murder (Photo Credit: Pixabay)

அக்டோபர் 29, சித்ரதுர்கா (Karnataka News): கர்நாடக மாநிலம், சித்ரதுர்கா (Chitradurga) பகுதியில் உள்ள குந்தலகுரா கிராமத்தில் வசித்தவர் ரங்கசாமி (வயது 50). இவரது மகன் தேவாஜ் (வயது 30). மகனுக்கு 30 வயதாகியும் திருமணம் செய்வதில், ரங்கசாமி ஆர்வம் காட்டவில்லை எனவும், தன்னை அலட்சியப்படுத்துவதாகவும் தேவராஜ் தனது தந்தையிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.  Abhinav Arora: ஏழு யூடியூபர்களுக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு.. 10 வயது சிறுவனின் அதிரடி செயல்.. காரணம் என்ன?!

இந்நிலையில், திருமண விஷயமாக தந்தைக்கும், மகனுக்கும் அடிக்கடி சண்டை நடந்து வந்துள்ளது. நேற்று முன்தினம் (அக்டோபர் 27) இரவு, உணவருந்தும் போது தனக்கு முட்டை கொடுக்கவில்லை என தந்தையுடன், தகராறு செய்துள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில், ஆத்திரமடைந்த தேவராஜ், எனக்கு திருமணம் செய்து வைக்காமல் என்னை புறக்கணிக்கிறாய் எனக் கூறி தந்தையை கீழே தள்ளி அவரது மார்பு, கழுத்தில் கால் வைத்து, பலமாக மிதித்து கொடூரமாக கொலை (Murder) செய்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அப்பினஹொளே காவல்துறையினர் தேவராஜை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

(The above story first appeared on LatestLY on Oct 29, 2024 01:06 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).