Security Forces Vehicle Accident: பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து; 2 வீரர்கள் பலி..! 2 பேர் படுகாயம்..!

சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில், 2 சி.ஏ.எப். வீரர்கள் பலியாகியுள்ளனர்.

Security Forces Vehicle Accident: பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து; 2 வீரர்கள் பலி..! 2 பேர் படுகாயம்..!
Security Force Vehicle Accident (Photo Credit: @ANI X)

ஜூன் 20, ராய்ப்பூர் (Chhattisgarh News): சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பல்ராம்பூர் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு சி.ஏ.எப். பாதுகாப்பு படைவீரர்கள் (Security Force) சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து சம்பவம் குறித்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். Police Constable Died: வெப்பத்தில் மயங்கி விழுந்த தலைமை காவலரை வீடியோ எடுத்த இன்ஸ்பெக்டர்; கேள்வி எழுப்பிய பொதுமக்கள்..! வீடியோ வைரல்..!

விசாரணையில், சி.ஏ.எப். அதிகாரி ஒருவர் கூறுகையில், 'நக்சலைட் பாதித்த பகுதியான சமாரி காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில், நேற்று இரவு முகம் மாற்றும் பணி நடைபெற்று வந்தது. இதனிடையே, வீரர்கள் சென்ற வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 2 சி.ஏ.எப். வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும். 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்' என தெரிவித்துள்ளார்.

(The above story first appeared on LatestLY on Jun 20, 2024 01:24 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).