Woman Murder: திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த பெண் - கத்தியால் குத்தி கொலை செய்த ஓட்டுநர்..!
ஏற்கனவே திருமணமான பெண்ணை ஓட்டுநர் ஒருவர் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தி, அதற்கு அவர் மறுத்ததால் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.
ஏப்ரல் 01, பெங்களூரு (Karnataka News): கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு எடியூர் அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் ஓட்டுநர் கிரீஷ் என்ற ரியான் கான் (வயது 35). இவர் பெங்களூரு நகரில் மகிழுந்து ஓட்டி வந்துள்ளார். மேலும், பெங்களூரில் வசித்து வரும் கொல்கத்தாவை சேர்ந்த பரிதா கானம் (வயது 42), கணவரை இழந்த இவர், கடந்த 2022-ஆம் ஆண்டு ரியான் கானுடன் பழக்கம் ஏற்பட்டு, பின்பு காதலாக மாறியது. பரிதா பெங்களூருவில் உள்ள ஜெயநகரில் மஜாஜ் சென்டரில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு, 2 மகள்கள் உள்ளனர். Mysore Rasam: சுவையான மைசூர் ரசம் செய்வது எப்படி? – விவரம் இதோ..!
இந்நிலையில், ரியான் கான் நேற்று முன்தினம் இரவு ஜெயநகரில் உள்ள ஷாலினி பூங்காவில் வைத்து பரிதாவிடன் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர், தனக்கு 2 பிள்ளைகள் இருக்கின்றன எனக்கூறி திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். உடனே ஆத்திரமடைந்த ரியான் கான், அவர் வைத்திருந்த கத்தியைக்கொண்டு பரிதாவை சரமாரியாக குத்தி கொலை (The Driver Killed Woman With Knife) செய்துவிட்டு, ஜெயநகர் காவல்நிலையத்திற்கு சென்று நடந்ததை கூறி சரணடைந்துவிட்டார்.
இதுதொடர்பாக, காவல்துறையினர் அவரை கைது விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கடந்த 2011-ஆம் ஆண்டு இந்து மதத்தில் இருந்து முஸ்லீம் மதத்திற்கு மாறியுள்ளார். பின்னர், அவருக்கும் அவரது தங்கைக்கும் திருமண வரன் கிடைக்காததால், மீண்டும் இந்து மதத்திற்கே மாறியுள்ளது தெரியவந்தது. இதனையடுத்து தான், இவருக்கும் பரிதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு, தற்போது அவரை கொலை செய்தது குறித்து தெரியவந்துள்ளது.
(The above story first appeared on LatestLY on Apr 01, 2024 04:52 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

